ஹாட்ரிக் அடிக்கணும்.. ஆந்திராவின் நகரி தொகுதியில் அட்டகாசமாக மீண்டும் களமிறங்கும் ரோஜா!

Apr 20, 2024,12:55 PM IST

நகரி: ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.கட்சியின் சார்பில் மீண்டும் நகரி தொகுதியில் போட்டியிடுகிறார் நடிகையும், அமைச்சருமான ரோஜா.. நகரி தொகுதியில் போட்டியிட ஆயிரக்கணக்கனோருடன் சென்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.


ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது. தமிழக எல்லையில் உள்ள நகரி தொகுதியில் 3வது முறையாக ரோஜா போட்டியிடுகிறார். ரோஜா வேட்பு மனு தாக்கலுக்கு முன்னர் நகரி புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டார். அங்கிருந்து திறந்த வேனில் நின்றபடி ரோஜா நகரி தாசில்தார் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றார். இந்நிகழ்ச்சியின் போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். 




இதைத்தொடர்ந்து ரோஜா மனுத்தாக்கல் செய்தார்.அப்போது பேசிய அவர், ஜனங்களுக்காக கஷ்டப்பட்டு சர்வீஸ் பண்ணனும்னு வந்ததாலே 2 முறை எம்எல்ஏ ஆகியிருக்கேன். ஏன் மந்திரி கூட ஆயிட்டேன். நகரி தொகுதியில் நான் 3வது முறையாக போட்டியிடக் கூடாது என்பதற்காக எதிர்க்கட்சிகள் சதி செய்தன. எனக்கு சீட் கிடைக்காமல் செய்ய பலர் போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்தனர். 


ஆனால் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து போட்டியிட வாய்ப்பளித்தார். நான் இந்த தொகுதியில் 3வது முறையாகவும் வெற்றி பெறுவேன். மனு தாக்கலின் போது இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. இது நாமிநேசன் தாக்கலா அல்லது  வெற்றி விழாவான்னு தெரியல. 


ரோஜாவுக்கு ஆப்பிள் மாலை




இங்கு வந்துள்ள நகரி தொகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவங்க பொண்ணு மாதிரி என்னை நினைக்கிறாங்க என்று உற்சாகமாக கூறினார். ரோஜாவுக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் பிரமாண்ட ஆப்பிள் மாலையும் போடப்பட்டது. தொண்டர்கள் மத்தியில் மிதந்தபடி ரோஜா சென்றார். அவரது முகத்தில் உற்சாகம் தெறித்தது. 


ஆந்திர மாநில சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, தெலுங்கு தேசம் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் தனி அணியாகவும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனி அணியாகவும் போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்