சென்னை: நடிகை கெளதமியின் சொத்துக்களை மோசடியாக பறித்த வழக்கில் கைதான அழகப்பனை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை கௌதமி கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் அழகப்பன் என்பவரும் அவரது குடும்பத்தினரும் தனது சொத்துக்களை மோசடி செய்து அபகரித்துள்ளதாக கூறியிருந்தார். 2004 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கபட்ட காரணத்தினால் தான் உடல் ரீதியாகவும், மனரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் அந்நேரத்தில், சொத்துக்களை அழகப்பனிடம் விற்கச் சொல்லி கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.
தன் உடல்நிலை காரணமாக மகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் பல்வேறு வேலைகளை செய்ய முடியாத நிலையில் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவிலிருந்து விலகுவதாகவும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் கெளதமி.

ஸ்ரீபெரும்புதூர் உள்ள சொத்துக்கள் உட்பட தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் இருக்கும் தனது சொத்துக்களை விற்பனை செய்வதற்கு அழகப்பன் பவர் ஏஜெண்டாக மாற்றியதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய சூழ்நிலையை தவறாக பயன்படுத்திக் கொண்டு அழகப்பன் தன்னிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நாடகம் மாடி சொத்துக்களை அபகரித்தாக கூறியுள்ளார். சொத்துக்களை கேட்டதற்கு கொலை மிரட்டல் விடந்ததாகவும் கூறியுள்ளார். தன்னிடம் மோசடி செய்து அபகரித்த சொத்துக்களை மீட்டு தருமாறும், கொலை மிரட்டல் விடுக்கும் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மத்திய குற்ற பிரிவு அதிகாரிகள் நடிகை கௌதமியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். கெளதமியின் புகாரின் பேரில் அழகப்பன் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் சமீபத்தில் கேரளாவில் வைத்துக் கைது செய்தனர். பின்னர் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அழகப்பனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. அதை ஏற்ற நீதிமன்றம், 3 நாட்கள் அவருக்கு போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மக்களின் உழைப்பால் வளர்ச்சி அடைந்த இந்தியா சாத்தியம்...குடியரசு தின உரையில் ஜனாதிபதி பேச்சு
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
{{comments.comment}}