சென்னை: பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி குடும்பத்தின் மீது அவரது அண்ணன் மனைவி முஸ்கான் நான்சி புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து ஹன்சிகா மற்றும் அவரது தாயாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் நடிகை குஷ்பு சாயலில் இருப்பதால் ஹன்சிகாவை சின்ன குஷ்பூ என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வந்தனர்.பிறகு எங்கேயும் எப்போதும், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆம்பள, சேட்டை, பிரியாணி, சிங்கம் 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் முன்னனி நட்சத்திரங்களுடன் நடித்து புகழ்பெற்றார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

நடிகை ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோட்வானிக்கும், தொலைக்காட்சி நடிகையான முஸ்கான் நான்சிக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இரண்டு வருடங்கள் வாழ்ந்த பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானியின் குடும்பத்தின் மீது அவரது அண்ணி முஸ்கான் நான்சி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதில் ஹன்சிகா மோத்வானியும் அவரது தாயார் மோனா மோத்வானியும் என்னுடைய திருமண வாழ்க்கையில் தலையிட்டு எனக்கும் என் கணவருக்கும் இடையில் பிரச்சனையை ஏற்படுத்துகின்றனர். ஹன்சிகா மோத்வானி, அவரது தாயார் மற்றும் சகோதரர் மூவரும் என்னிடமிருந்து விலையுயர்ந்த பொருட்கள், பணத்தை கேட்கிறார்கள். சொத்து முறைகேட்டிலும் ஈடுபட்டுள்ளார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மும்பையில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில் ஹன்சிகா குடும்பத்தின் மீது 4 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Good touch & bad touch மட்டுமல்ல.. பெண் பிள்ளைகளுக்கு வீரக் கலைகளும் அவசியம்!
கல்வி அவளின் அடையாளம்.. தன்னம்பிக்கை அவளின் ஆயுதம்!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன்.. நான் அரசியலையே தொழிலா பண்றவன்...கராத்தே பாபு பட டீசர் வெளியீடு!
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
வீட்டின் வாசலில் நின்றாலும்.. வானம் வரை நீளும் கனவுகள்!
கைகள் மெலிந்தாலும், கனவுகள் வலிமை கொண்டவை.. பெண் குழந்தைகள்!
{{comments.comment}}