நடிகை கஸ்தூரி போட்ட டிவீட்.. அடுத்தடுத்து நடந்த சம்பவம்.. கடைசியில் "அட..கர்ர்ர்ர்"!

Apr 11, 2023,11:55 AM IST
சென்னை: நடிகை கஸ்தூரி போட்ட டிவீட்டுக்கு பதிலளிக்க வந்தவருடன் அவர் நடத்திய காரசாரமான விவாதம் டிவிட்டர் தளத்தையே சூடாக்கி விட்டது.

நடிகை கஸ்தூரி சங்கர் ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில், எனக்கு ஒரு திராவிடியா (திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு இப்படி ஒரு வார்த்தைப் பிரயோகம் பயன்படுத்தப்படுகிறது) பெண்ணின் வீடியோ பார்வர்டாகி வந்தது. அதில் கலாஷேத்திராவைக் காரணமாக வைத்து பயங்கரமான பொய்களை அவர் அவிழ்த்து விட்டிருந்தார். பிராமணர்களுக்கு எதிராக கடுமையாக பேசியிருந்தார். முழுக்க முழுக்க அவதூறுப் பேச்சுதான். அவரது செயல்பாடுகளைப் பார்த்தால் பாஜக, இந்து, பிராமண எதிர்ப்பு மட்டுமே இருந்தது அவரது அடையாளமே அவதூறுப் பேச்சாத்தான் உள்ளது.



யார் இந்தப் பெண்.. எங்கிருந்து வருகிறார்.. இவருக்கு வேலை கிடையாதா, குடும்பம் கிடையாதா.. ஏன் இப்படி அவதூறாகப் பேசுகிறார் என்று அதில் கேட்டிருந்தார் கஸ்தூரி.

அதற்கு நாகரீக காவி 420 என்ற பெயரில் உள்ள ஒருவர் பதிலளிக்க வந்தார். அதற்குப் பிறகு நடந்த கூத்தைப் பாருங்கள்.

நாகரீக காவி420 - கஸ்தூரி சங்கர் அவர்தான் நூலிபான்களின் அட்டகாசம் குறித்து பேச சரியான ஆள்.

கஸ்தூரி சங்கர் - நூலிபான் என்றால் என்ன அர்த்தம் சார். இவரை எப்படி சரியான ஆள் என்று சொல்கிறீர்கள்?

நாகரீக காவி420 - தங்களுக்கு தெரியாத விசயம் இந்த உலகில் உண்டா மேடம்? நான் சொல்லித்தான் இதற்கு பதில் தெரியனுமா?

கஸ்தூரி - டிபிக்கல் திராவிடியா ஸ்டிராட்டஜி.. கோழை!

நாகரீக காவி420 - Cow பக்தர்கள் Cowardஐ பத்தி பேசினா நகைச்சுவையா இருக்கு. ரொம்ப விரக்தி அடைய வேண்டாம் மேடம்...Cool

கஸ்தூரி - நான் எப்பவும் கூல்தான்.. நீங்க எப்பவும் ஃபூல்தான்.

நாகரீக காவி420 -  டி.ஆர் படம் புக் ஆயிருக்கா மேடம்.ரைமிங்கா போசுறீங்க? அது சரி... மூளை வீங்கி நீங்க எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.

கஸ்தூரி - முகமும் முதுகெலும்பும் இல்லாத  கோழை  நீயே பேசும்போது நேர்மையான  நான் பேசுவதற்கு எதுக்கு பயப்படணும்.

நாகரீக காவி420 -  முகம் இல்லைன்னா என்னா மேடம்?  முகத்தை காட்டும் நீங்க முதுகெலும்போட கேள்வி கேக்குறீங்களா இல்லை பதில் போடுறீங்களா?  கோழி குருடா இருந்தா என்ன குழம்பு ருசியா இருக்கனும் மேடம். அவ்வளவுதேன்

கஸ்தூரி  - முகம் இல்லைனா என்னனு கேட்குற வெட்கம் கெட்டவனோடயா  பேசிகிட்டு இருந்திருக்கேன் ! அட கர்ர்ர்ர்

நாகரீக காவி420 -  முகத்தை வச்சு மார்க்கெட் பிடிக்கவா வந்துருக்கேன்?  சொல்ற விசயத்தை பாருங்கோ மேடம். பி கூல்...ரிலாக்ஸ்.

இப்படித்தான் போகுது டிவிட்டரில் பலருடைய வாக்குவாதங்கள்!

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்