சூர்யா ரொம்ப ஸ்வீட்.. அழகான கண்கள்.. அவருடன் நடிக்க ஆசை .. மாளவிகா மோகனன் ஓபன் டாக்!

Aug 12, 2024,06:40 PM IST

சென்னை:   நடிகர் சூர்யா மிகவும் இனிமையானவர். விரைவில் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என நடிகை மாளவிகா மோகனன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


மலையாள நடிகையான மாளவிகா மோகனன் மலையாளத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில் இவர்  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்  ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின்  வெற்றிக்கு பின்னர் மாளவிகாவுக்கு கிடைத்த மிகப்பெரிய  ஜாக்பாட் பரிசு நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.




மாஸ்டர் படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருகிறார். அவ்வப்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எப்போதுமே பரபரப்பாக வைத்திருக்கிறார். சோசியல் மீடியா பக்கத்தில் எப்பவுமே ஆக்டிவாக இருப்பதால் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். 


தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஆர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன். இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆக தயாராக உள்ளது. இப்படத்தை வெகுவாக எதிர்பார்த்துள்ளார் மாளவிகா மோகனன்.


இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகப்  பிரம்மாண்டமாக நடைபெற்றது. அப்போது நடிகர் விக்ரமுடன் இணைந்து பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாது. சக நடிகை சௌகரியமாக அக்கறையுடன் அரவணைத்து பணியாற்ற வைப்பதில் விக்ரமுக்கு நிகர் யாருமில்லை என தெரிவித்திருந்தார். 


மாளவிகா தற்போது  பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் சர்தார் 2  திரைப்படத்திலும் கமிட்டாகி உள்ளார். இந்த நிலையில்  நடிகர் கார்த்தியின் அண்ணனும், நடிகருமான சூர்யாவுடன் நடிப்பதற்கும் ஆர்வம் காட்டுகிறாராம் மாளவிகா. இதை தனது எக்ஸ் தளத்திலேயே ஓப்பனாக சொல்லியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நடிகர் சூர்யா மிகவும் இனிமையானவர். அவரின் கண்கள் அழகாக பல பாவங்களை வெளிப்படுத்தக் கூடியவை. விரைவில் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். கங்குவா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்