சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை தான் வரவேற்பதாகவும், அவர் அரசியல் வந்ததற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் பாஜக பிரச்சார கூட்டத்தில் பேசிய நடிகை நமீதா கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நமீதா. பின்னர் கவர்ச்சிகரமான நாயகியாக வலம் வந்த நமீதா, இடை இடையே குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கவர்ச்சி நடிகையாக நடித்து புகழ்பெற்றவர்.
2001 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தவர். இதனைத் தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றார். இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த அழகிய தமிழ் மகன் என்ற படத்தில் நடிகர் விஜய்யுடன் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் நடிகை நமீதா பிரபலமானார்.
தமிழ் சினிமாவின் பல்வேறு நடிகர் நடிகைகள் பெருமளவில் பாஜகவில் இணைந்து வருகின்றனர். நடிகை ராதிகா சரத்குமார் ஏற்கனவே பாஜகவில் இணைந்து ஆதரவு திரட்டி வருகிறார். இதனைத் தொடர்ந்து இன்று நடிகை ஆர்த்தி கணேஷ் பாஜகவில் இணைந்துள்ளார். இவர் விரைவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் நடிகை நமீதா பாஜகவிற்கு ஆதரவளித்து பிரச்சாரம் செய்து வருகிறார். குறிப்பாக நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல். முருகனை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது நடிகை நமீதா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திமுக இதுவரை 234 தொகுதிகளிலும் மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்துள்ளதா.. ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மக்களை சந்தித்துள்ளார். அவர்களின் தேவையை கேட்டு அறிந்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெற்று கச்சத்தீவு விவகாரத்தில் ஒரு நல்ல நடவடிக்கையை எடுப்பார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். அவர் ஒரு புத்திசாலி. அரசியலில் அவர் ஒரு திறமையான போட்டியாளராக செயல்படுவார் என நான் நினைக்கிறேன். விஜய் அரசியல் வந்ததற்கு நான் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}