டெல்லி: இந்தியா என்று எதிர்க்கட்சிகள் கூட்டணிக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளதால் பாஜகவினர் சமூக வலைதளங்களில் அதை பலவிதமாக சீண்டி கிண்டலடித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை மீரா சோப்ரா (நிலா) நாட்டின் பெயரையே பாரத் என்று மாற்றி விடலாம் என்று பேசியுள்ளார்.
காங்கிரஸ் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் கூடி பெங்களூரில் 2 நாட்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டம் நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அந்த கூட்டத்தின் இறுதியில் கூட்டணிக்கு வைக்கப்பட்ட பெயர்தான்.
Indian National Developmental Inclusive Alliance -- INDIA என்று இக்கூட்டணிக்கு பெயர் வைத்துள்ளனர். அதிரடியாக இந்த பெயர் வைப்பு பிரபலமாகி விட்டது. நேற்று முதல் இது டிவிட்டரில் டிரெண்டிங்கில் உள்ளது. இந்தப் பெயரையாரும் எதிர்பார்க்கவில்லை. வழக்கம் போல ஏதாவது முற்போக்குக் கூட்டணி, தேசிய கூட்டணி என்றுதான் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நாட்டின் பெயரையே கூட்டணிக்கு சூட்டிய சமயோசிதத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை.
இந்த பெயருக்கு கவுன்டர் கொடுக்கும் நிலைக்கு நேற்று பாஜகவை தள்ளி விட்டது எதிர்க்கட்சிகளின் "இந்தியா". பிரதமர் நரேந்திர மோடியே இந்த பெயர் மாற்றம் தொடர்பாக தனது பாணியில் ஒரு விளக்கத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கொடுக்க நேரிட்டு விட்டது.
தற்போது பாஜகவினர் பலரும் இந்தியா என்று சொல்வதற்குப் பதில் பாரத் என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர். இந்தியா என்ற சொல்லை இனி யார் சொன்னாலும் அது எதிர்க்கட்சிக் கூட்டணியைக் குறிக்கும் வகையில் அமைந்து விடும் என்பதால் பாஜகவினருக்கு இது பெரும் சிக்கலாக மாறியுள்ளது.
இந்த நிலையில் நடிகை நிலா ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், நாம் அனைவரும் இனிமேல் நமது நாட்டை பாரத் என்று அழைப்போம் என்று கூறியுள்ளார். இவர் ஏற்கனவே முன்பு போட்ட ஒரு டிவீட்டில், எதிர்க்கட்சிகள் பயந்து நடுங்குவது போல தெரிகிறது. அவர்கள் கூடுவதைப் பார்க்கும்போது சிங்கத்தை எதிர்த்து போராட துணிவது போலத்தான் தெரிகிறது என்று கிண்டலடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மீராவின் டிவீட்டைப் பார்த்த பலரும் முதலில் உங்க பயோவில் உள்ள இந்தியா என்ற பெயரை மாற்றுங்க பார்ப்போம் என்று நக்கலடித்து வருகின்றனர். அதில் India at cannes என்ற வார்த்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}