மனைவி மடி மீது என்னை அமர வைத்து பத்திரமாக கூட்டிச் சென்றார் "கேப்டன்".. ரேகா உருக்கம்

Dec 29, 2023,07:40 PM IST

சென்னை: கேப்டன் விஜயகாந்த்தை என்னால் மறக்கவே முடியாது. ரொம்ப ரொம்ப நல்ல மனிதர். ஹெல்த்தைப் பார்க்காம விட்டுட்டாரு என்று கூறி வேதனைப்பட்டுள்ளார் நடிகை ரேகா.


விஜயகாந்த்துடன் இணைந்து நடித்த நாயகியர்களில் ரேகாவும் ஒருவர். விஜயகாந்த் மறைவு குறித்து உருக்கமான கருத்துக்களை வீடியோ மூலமாக வெளியிட்டுள்ளார் ரேகா.


அதில் ரேகா கூறியிருப்பதாவது:




விஜயகாந்த் சாரை லாஸ்ட்ல இந்த நிலைமையில வந்து பார்க்க முடியலனு  ரொம்ப கஷ்டமா இருக்கு. யோகி பாபும், நானும் கேரளா சூட்டிங்கில தான் இருக்கோம். 2 பேரும் ரொம்ப வருத்தப்பட்டோம். அவருகூட நாலு அஞ்சு படங்கள் பண்ணியிருக்கேன்.  எல்லாருடைய டெத்துக்கும் நா போயிருக்கேன். இந்த  நேரத்துல அவரோட முகத்தை பார்க்க முடியல.


அவர் ஒரு பெரிய லெஜண்ட். அவரோட டெத்துக்கு போக முடியல ரொம்ப கவலையா இருக்கு எனக்கு. ரொம்ப நல்லா ஞாபகம் இருக்கு.  அவரோட கல்யாணத்தப்ப பயங்கரமான கிரௌடுல நான் சிக்கிகிட்டேன். அப்ப திடீர்னு ஒரு கார் எங்கிட்ட வந்து நின்னுச்சு. உள்ளே வாங்க உள்ள வாங்கன்னு சொன்னாங்க. யார்னு பார்த்தா, கல்யாண மாப்பிளையும் பெண்ணும் உள்ளே இருந்தாங்க. மேடம் மடியில தான் நான் உட்கார்ந்தேன். அப்புறம் அவங்க என்னோட கார் கிட்ட வந்து என்னை இறக்கி விட்டாங்க. 


கல்யாணத்துக்கு போன என்னால அவருடைய இறப்புக்கு போக முடியல. என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அந்த ரெண்டு குழந்தைகளும் அழுறத பார்த்து ரொம்ப வருத்தமா இருக்கு. அப்படி அழுகிறார்கள். ரொம்ப ரொம்ப நல்லவரு. லீடர்ஷிப் உள்ளவரு. வெளியில் கூட ஒரு விஷயத்தை எப்படி ஹேண்டில் பண்ணனும்னு ரொம்ப நல்லா தெரிஞ்சவரு. அவரு கூட நாலு அஞ்சு படம் பண்ணியிருக்கேன்.


அவர்  எல்லாருக்கும் நல்லா சாப்பாடு போடுவாரு. நடிகர் சங்கத்தை நல்லா கொண்டு போனாரு. ஹெல்த்தை பாக்காம விட்டுட்டாரு. ரொம்ப பெரிய வருத்தமான விஷயமா இருக்கு. ரெண்டு நாளா அவரைப் பாக்குறப்ப ரொம்ப கஷ்டமா இருக்கு. அவரோட ஆத்மா சாந்தி அடைய இறைவனை நான் பிரார்திக்கிறேன் என்று கூறியுள்ளார் ரேகா.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்