திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் துப்புறவுப் பணியாளர்கள் தன்னைத் தொடக்கூடாது என நடிகை ரோஜா கூறியதாக சர்ச்சை எழுந்து நிலையில் இது குறித்து விளக்கம் கொடுத்து நான் மெதுவாக வாங்க என்றுதான் கை காட்டி கூறினேன் என விளக்கம் அளித்துள்ளார்.

முன்னாள் ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா நேற்று சாமி தரிசனம் செய்ய திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தார். சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருந்து வெளியே வந்தார். அப்போது ரோஜாவை பார்த்ததும் ஏராளமானோர் செல்பி எடுக்க ஆர்வமுடன் வந்தனர். இதனையடுத்து கோயில் உள்ள நிர்வாகிகள் ரோஜாவுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது அங்கு செல்பி எடுக்க வந்த தூய்மை பணியாளர்களை ரோஜா தள்ளி நின்று செல்பி எடுக்க சைகை காட்டுவது போன்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.
இந்த வீடியோ வைரல் ஆகி கடும் விமர்சனத்திற்கும் ஆளானது. ரோஜைவை விமர்சித்து பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதுகுறித்து ரோஜா தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், திருச்செந்தூர் கோயிலில் தரைத்தளம் தாழ்வாக இருந்ததால் என்னுடன் செல்பி எடுக்க ஓடி வந்த தூய்மை பணியாளர்களை மெதுவாக வாங்க என கைகாட்டி கூறினேன். ஆனால் அவர்களை நான் தொடக்கூடாது தள்ளி நில்லுங்கள் என சொன்னதாக தவறாக சித்தரித்துள்ளனர். தூய்மை பணியாளர்கள் செய்யும் பணி உயர்வானது. அவர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. அவர்களை தொட வேண்டாம் என எப்படி சொல்லுவேன். என் மீது காழ்ப்புணர்ச்சியோடு அவதூறு பரப்புவது வருத்தமளிக்கிறது எனக் கூறியுள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}