இந்தி பிக் பாஸைக் கலக்கும்.. தமிழ்ப் பெண்.. அட.. இவங்க நம்ம தேங்காய் சீனிவாசன் பேத்தியாச்சே!

Oct 08, 2024,05:12 PM IST

மும்பை: இந்தி தெரியாது போடா அப்படின்னு சொல்லியும் தமிழ்நாட்டுக்காரர்கள் இந்தியாவை அதிர வைத்துள்ளனர்.. அதே போல இப்போது இந்தி சூப்பரா தெரியும்.. வந்து பாருன்னு சொல்லி ஒட்டுமொத்த இந்தி ஆடியன்ஸையும் அசர வைத்துக் கொண்டிருக்கிறார் ஒரு தமிழ்ப் பெண்.. இந்தி சின்னத்திரை ரசிகர்களின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளார் அந்தப் பெண்.


ஒட்டுமொத்த இந்தி சின்னத் திரை ரசிகர்களையும் தன் பக்கம் வசீகரதித்துத பெரும் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டிருக்கிறார் இந்தப் பெண். பிக் பாஸ் சீசன் 18ன் மூலமாகத்தான் இந்த கலகல காட்சிகள் அரங்கேறிக் கொண்டுள்ளன.




இந்தியில் 18வது சீசன் பிக் பாஸ் தொடங்கி படு சூடாக போய்க் கொண்டிருக்கிறது. வழக்கம் போல சல்மான் கான் இதைத் தொகுத்து நடத்தி வருகிறார். இந்த சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் குறுகிய காலத்திலேயே அனைவரின் கவனத்தையும் தன்  பக்கம் ஈர்த்திருக்கிறார் இந்தத் தமிழ்ப் பெண்.


இந்த ஷோவில் விவியன் டிசேனா, ஈஷா சிங், நைரா  பானர்ஜி, கரன் வீர் மெஹ்ரா, சஹத் பாண்டே, அவினாஷ் மிஸ்ரா, செஷாதா தாமி, தஜீந்தர் சிங் பாகா, அர்பீன் கான், சாரா அர்பீன் கான், ரஜத் தலால், முஸ்கான் பாம்னே, சும் தரங், ஷில்பா ஷிரோத்கர், அலிஸ் கெளசிக், ஹேமா சர்மா, குணரத்னா சதவார்தே ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டு வருகிறார் நம்ம ஊர் பொண்ணு.. அட யாருங்க அதுன்னு கேக்கறீங்களா.. அவங்கதான் ஸ்ருதிகா அர்ஜீன்.




இவர் வேறு யாருமல்ல மறைந்த தேங்காய் சீனிவாசனின் பேத்திதான் ஸ்ருதிகா. தமிழில் கூட சூர்யாவுடன் ஹீரோயினாக ஸ்ரீ என்ற படத்தில் நடித்தவர். அதன் பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி விட்டார். இப்போது சல்மான் கானின் பிக் பாஸ் ஷோவில் புயல் போல கலக்கிக் கொண்டிருக்கிறார். அக்டோபர் 6ம் தேதி முதல் இது ஒளிபரப்பாகி வருகிறது. 


நடிகையாக இருந்த ஸ்ருதிகா பின்னர் குக் வித் கோமாளி ஷோவில் கலந்து கொண்டு பட்டையைக் கிளப்பினார். அந்த ஷோவில் அவர் வின்னராகவும் உயர்ந்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.  தமிழ் மற்றும் மலையாளத்தில் மொத்தமே ஐந்து படங்களில்தான் இவர் நடித்துள்ளார். திருமணத்திற்குப் பின்னர் குடும்பத்தோடு ஒதுங்கி விட்டார். சிறு தொழிலதிபராகவும் வலம் வருகிறார். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.


இப்போது பிக் பாஸ் வீட்டில் ஸ்ருதிகா கலக்கிக் கொண்டிருக்கிறார். அட்டகாசமாக இந்தியில் பேசுகிறார்.. செமையாக ஒவ்வொருவரையும் ஹேன்டில் செய்கிறார்.. சூப்பராக பேசுகிறார், வாதிடுகிறார்.. ஜாலியாக இருக்கிறார்..  அதி மேதாவித்தனமாக எல்லாம் நடப்பதில்லை.. மாறாக சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனிலியா மாதிரி எல்லோருக்கும் பிடித்த பெண்ணாக கலக்கி வருகிறார்.


இந்தி சின்னத்திரையின் டாக் ஆப் தி ஷோவே.. நம்ம ஸ்ருதிகாதான்!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா

news

RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

news

தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது

news

இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!

news

இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!

news

பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு

news

சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?

news

பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்

news

Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்