மும்பை: வடக்கு, தெற்கு என்று சினிமாத் துறை பிரிந்து இருக்காமல், இருவரும் இணைந்து பான் இந்தியா படங்களை உருவாக்க வேண்டும் என்று நடிகை தமன்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.
தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள தமன்னா அரண்மனை 4 திரைப்படத்திற்கு பிறகு தமிழில் புதிய படங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்து வருகிறார். சமீபத்தில் சிக்கந்தர் கா முக்தார் என்ற படத்தில் நடித்து முடிந்துள்ளார் தமன்னா. இந்த படத்தில் இவருடன் அவினாஷ் திவாரி, ஜிம்மி ஷெர்கில், திவ்யா தத்தா மற்றும் சோயா அப்ரோஸ் ஆகியோர் நடித்துள்ளனர். நீரஜ் பாண்டே இயக்கியுள்ள இந்த படம் வரும் 29ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

இதனையடுத்து, தமன்னா திருமணத்திற்கு தயாராக உள்ளதாக தகவல் பரவி வருகிறது. பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் தமன்னா 2025ல் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு தமன்னா -விஜய் வர்மா திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தமன்னா குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதனால் கைவசம் உள்ள 2 படங்களை முடித்துவிட்டு திருமணத்திற்கு தயாராகப் போகிறாராம் தமன்னா.
இந்தப் பின்னணியில், வட மற்றும் தென் இந்திய சினிமாவில் உள்ள வேறுபாடுகளை பற்றி தமன்னா பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எங்கள் சொந்த துறையில் வேறுபாடுகளை உருவாக்குவதை நிறுத்த வேண்டிய நேரம் இது. இது சினிமாவை மேலும் அழிக்க மட்டுமே செய்திருக்கிறது. இதுதொடர்பான பழி எப்போதும் நடிகர் அல்லது நடிகைகள் மீதுதான் விழுகிறது.
வட இந்திய சினிமாத் துறையும் தென்னிந்திய சினிமாத் துறையும் ஒன்றிணைந்து ஒரு உண்மையான பான் இந்தியா திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை பொதுக்கூட்டம்... திடீர் என சென்னைக்கு மாற்றம்!
ஜன.,15 பொங்கல் தினத்தில் ஜனநாயகன் மேல்முறையீட்டு மனு விசாரணை
பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
2026 சட்டசபை தேர்தல்... யாருடன் கூட்டணி?... மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த்!
பழனி முருகன் கோவிலில் போராட்டம்: ஹெச். ராஜா உட்பட 12 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
தமிழர்களின் குரலை அடக்க முடியாது...ஜனநாயகனுக்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் காந்தி
தமிழக அரசின் திருவள்ளுவர் தின விருதுகள் அறிவிப்பு
புதுசு புதுசா யோசிக்கிறாங்களே...சீனாவில் உயிருடன் இருப்பதை அப்டேட் செய்ய புதிய "ஆப்"
{{comments.comment}}