GOAT அப்டேட்..சிறப்புத் தோற்றத்தில் திரிஷா.. அதுவும் எப்படி தெரியுமா..விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

Mar 15, 2024,10:36 AM IST

சென்னை: தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும்  கோட் படத்தில் நடிகை திரிஷா சிறப்பு தோற்றத்திலும், ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


உச்ச நடிகரான நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக நடித்துள்ளார். இப்படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் அதாவது GOAT என பெயரிடப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே விஜய்யின் புதிய கீதை படத்திற்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்படத்தில் இசையமைத்துள்ளார்.


இப்படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, வி.டி.வி கணேஷ், வைபவ், பிரேம்கி அமரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் அஜய் ராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர  பட்டாளங்களே நடித்துள்ளனர். இப்படம்  டைம் டிராவல் பின்னணியில் உருவாக்கபட்டுள்ளதாம்.




மேலும் தந்தை மகன் என்ற இரு கதாபாத்திரத்தி ல் நடிகர் விஜய் நடித்து அசத்தியுள்ளாராம். இயக்குனர் வெங்கட் பிரபு மங்காத்தா திரைப்படத்தின் மூலம் நடிகர் அஜித்துக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்ததோ, அதேபோல் நடிகர் விஜய்க்கும் கோட் படம் மூலம் மிக பெரிய வரவேற்பு கிடைக்கும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர். 


சமீபத்தில் இப்படத்தின் அடுத்தடுத்து மூன்று போஸ்டர்கள் ரிலீஸ் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தனர் படக்குழுவினர்.அதில் முதல் போஸ்டரில் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது. இரண்டாவது போஸ்டரில் ஒரு விஜய் வயதான கெட்டப்பிலும், மற்றொரு விஜய் கம்பீரமான கெட்டப்பிலும் கையில் கமாண்டோகள் பயன்படுத்தும் துப்பாக்கியுடன் போஸ்டர்கள் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து  பிரபுதேவா, விஜய், அஜ்மல், மற்றும் பிரசாந்த் ஆகியோர் கையில் துப்பாக்கியுடன் உள்ள மூன்றாவது போஸ்டர் வெளியிடப்பட்டது.


கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி விஜய் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்தார். 2026 இல் வரும் சட்டமன்றத் தேர்தலைலே தம்முடைய இலக்கு என்ற நோக்கில் தீவிரமான அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.இதற்காக தான் கமிட்டான இரு படங்களில் மட்டும் நடித்து முடித்துவிட்டு சினிமா வாழ்க்கைக்கு முடுக்கு போடபோவதாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றத்துடன் காணப்பட்டு வந்தனர்.இருப்பினும் ரசிகர்கள் மனதளவில் தங்களை தயார் படுத்திக் கொண்டு விஜய் நடிக்கும் கோட் மற்றும் விஜய் 69 ஆவது படத்திற்காக எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர். விஜய் நடிக்கும் இந்த இரு படங்களையும்  கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.


கோட் படத்தில் விஜய் நடிக்கும் இரண்டு வேடங்களில், ஒரு விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரியும், அப்பா வேடத்திற்கு ஜோடியாக சினேகாவும் நடிப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளிவந்த நிலையில், தற்போது திரிஷா இப்படத்தில் சிறப்பு தோற்றத்திலும், ஒரு பாடலுக்கு நடனம் ஆட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் விஜய் மற்றும் திரிஷா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் இப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்