சென்னை: நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் தொடர்பாக போலீஸார் பிறப்பித்த சம்மனைத் தொடர்ந்து இன்று காவல் நிலையத்தில் ஆஜரானார் சீமான். அவருடன் அவரது மனைவியும் வந்துள்ளார்.
நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருமணம் செய்து விட்டு மோசடி செய்து விட்டார், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்தார் என்பது உள்ளிட்ட புகார்களைக கூறியிருந்தார் நடிகை விஜயலட்சுமி. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி மருத்துவப் பரிசோதனைகளை நடத்தி மாஜிஸ்திரேட் மூலம் வாக்குமூலமும் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் திடீரென பல்டி அடித்த விஜயலட்சுமி, சீமான் சூப்பர் தமிழ்நாட்டில் அவருக்குத்தான் ஃபுல் பவர் உள்ளது. அவரை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. நான் தோத்துப் போயிட்டேன்.. எனது புகாரை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி புகாரைத் திரும்பப் பெற்றார்.
இருப்பினும் பல்வேறு முக்கியப் பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் விசாரணைக்கு சீமான் வந்தாக வேண்டும் என்பதில் போலீஸ் தரப்பு தீர்மானமாக இருந்தது. மேலும் அவருக்கு 2 வது முறையும் போலீஸார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து இன்று தனது மனைவியுடன் வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு வந்தார் சீமான்.
சீமான் வருகையையொட்டி நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கணக்கில் கூடி வளசரவாக்கம் காவல் நிலையப் பகுதியில் பெரும் அமளியை ஏற்படுத்தி விட்டனர். அந்தத் தெருவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல் துறையினர் யாரையும் உள்ளே அனுமதிக்கவிடவில்லை. சீமான் மற்றும் அவருடன் 5 பேரை மட்டுமே போலீஸார் அனுமதித்தனர். இதனால் சீமான், அவரது மனைவி மற்றும் வக்கீல்கள் மட்டுமே காவல் நிலையத்துக்குள் சென்றனர்.
போலீஸ் விசாரணைக்குப் பின்னர்தான் இந்த வழக்கு என்னாகும் என்பது தெரிய வரும்.
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
{{comments.comment}}