குட் பேட் அக்லி.. இதுதான் அஜீத்தின் 63வது பட டைட்டில்.. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்!

Mar 14, 2024,07:08 PM IST

- அஸ்வின்


சென்னை: அஜீத் குமார் நடித்து வரும் விடா முயற்சி அப்டேட்டுகள் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து அலை பாய்ந்து கொண்டுள்ள நிலையில் அஜீத்தின் 63வது பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.


அஜீத் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்து அவர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளார். இது அஜீத்தின் 63வது படமாகும்.


ஆதிக் ரவிச்சந்திரன் இதற்கு முன்பு திரிஷா இல்லைன்னா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பகீரா மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் மார்க் ஆண்டனி ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியது.




இந்த நிலையில் தனது 5வது படமாக அஜீத்தை வைத்து இயக்கவுள்ளார். இப்படத்திற்கு குட் பேட் அக்லி என பெயரிடப்பட்டுள்ளது. டைட்டிலே படு வித்தியாசமாக இருக்கிறது. இதில் நல்லவனாகவும், கெட்டவனாகவும் அஜீத்தே நடிக்கப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.


ஹீரோவை 2, 3 கெட்டப்பில் காட்டுவது ஆதிக் ரவிச்சந்திரனுக்குப் புதிதில்லை. ஏஏஏ படத்தில் சிம்புவை 3 கேரக்டர்களில் காட்டியிருப்பார். மார்க் ஆண்டனி படத்தில் 2 எஸ்.ஜே. சூர்யா, 2 விஷால் என மிரட்டியிருப்பார். அதாவது ஹீரோவும் 2, வில்லனும் 2. அந்த வரிசையில் இப்போது அஜீத்தையும், 2, 3 கேரக்டர்களில் காட்டத் திட்டமிட்டிருக்கிறாரா ஆதிக் என்ற படு பயங்கர எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.




விஜய்யின் படத்துக்கு தி கிரேட்டஸ்ட் ஆப் டைம் என்று ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அதே பாணியில் அஜீத்தின் படத்துக்கும் ஆங்கிலத்திலேயே பெயர் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


குட் பேட் அக்லி படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கவுள்ளார். 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு படம் திரைக்கு வரும் என்றும் படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் ஷூட்டிங் ஆரம்பிக்கவுள்ளதாம். இப்பட நிறுவனம்தான் பயங்கரமாக ஓடிய புஷ்பா படத்தைத் தயாரித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்