நாங்க ரெடி.. ஆதித்யா எல் 1 கவுன்ட்டவுன் துவங்கியது.. இஸ்ரோ அறிவிப்பு

Sep 01, 2023,04:37 PM IST
டெல்லி : ஆதித்யா எல் 1 விண்கலத்தை சூரியனுக்கு அனுப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், அதற்கான கவுன்ட்டவுன் துவங்கி விட்டதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சமீபத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை நிலவிற்கு அனுப்பியது. ஆகஸ்ட் 23 ம் தேதி நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய சந்திரயான் 3 ன் பிரக்யான் ரோவர் கடந்த சில நாட்களாக நிலவில் ஆய்வுகளை நடத்தி வருகிறது. அங்கு நடத்தப்பட்டு வரும் ஆய்வு குறித்த தகவல்கள், நிலவின் புகைப்படங்கள் ஆகியவற்றை பூமிக்கு அனுப்பி வருகிறது. சமீபத்தில் நிலவில் சல்ஃபர், ஆக்சிஜன், கால்சியம், மாங்கனீஷ் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் கண்டுபிடித்துள்ளது.




பிரக்யான் ரோவர் தினமும் நிலவில் என்ன செய்து கொண்டிருக்கிறது, அடுத்து என்ன செய்யப் போகிறது என்பது உள்ளிட்ட அப்டேட்களை தினமும் வெளியிட்டு வருகிறது. நிலவிற்கு சந்திரயான் 3 அனுப்பி வெற்றி பெற்ற கையோடு, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை அனுப்ப உள்ளதாக சமீபத்தில் அறிவித்தது. செப்டம்பர் 02 ம் தேதி ஆதித்யா எல் 1 விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நாளை ஆதித்யா எல் 1 விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும், இதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் துவங்கி விட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.  செப்டம்பர் 02 ம் தேதி காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல் 1 சூரியனை ஆய்வு செய்ய புறப்பட உள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்கான ராக்கெட் மற்றும் செயற்கைகோள் இரண்டும் தயாராக உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் உறுதி செய்துள்ளார்.

பூமியில் இருந்து 1.5 மில்லியன் கி.மீ., தூரம் பயணித்து, அங்கிருந்து சூரிய புயல், சூரிய கொரோனா உள்ளிட்ட சூரியனின் செயல்பாடுகளை கண்காணித்து முன்கூட்டியே அறிவிக்கும் பணியை ஆதித்யா எல் 1 செய்ய உள்ளது. பூமியின் காலநிலை மாறுபாட்டிற்கான காரணங்கள் குறித்தும் ஆதித்யா எல் 1 ஆய்வு செய்ய உள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஆதித்யா எல் 1 நாளை தனது பயணத்தை துவங்க உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்