ஸ்ரீஹரிகோட்டா: சூரியனை ஆய்வு செய்யும் வகையில் இந்தியா வடிவமைத்துள்ளஆதித்யா எல் 1 விண்கலம் இன்று பகல் 11.50 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து விண்கலம் புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
சந்திரயான் 3 திட்ட வெற்றிக்குப் பின்னர் உலகின் கவனம் இந்தியாவின் ஆதித்யா எல் 1 விண்கலம் மீது படிந்துள்ளது. இது சூரியனை ஆய்வு செய்ய இந்தியா வடிவமைத்துள்ள விண்கலமாகும். விண்வெளியில் லாக்ரேஞ்ச் 1 பகுதியில் நிலை நிறுத்தப்பட்டு இந்த விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும்.
விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டு விண்வெளி ஆய்வில் ஈடுபடும் முதல் இந்திய விண்கலம் என்ற பெருமையும் ஆதித்யாவுக்குக் கிடைத்துள்ளது. சூரியனின் வெளிப்புறப் பகுதி குறித்த ஆய்வில் ஆதித்யா எல் 1 ஈடுபடும். மேலும் சூரியனைச் சுற்றியுள்ள ஹாலோ குறித்தும் அது ஆய்வு செய்யும். லாக்ரேஞ்ச் பகுதி குறித்த ஆய்வையும் ஆதித்யா விண்கலம் மேற்கொள்ளும்.
ஆதித்யா விண்கலமானது பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட விண்கலமானது, திட்டமிட்டபடி புவி வட்டப் பாதையில் கொண்டு சென்று விடப்பட்டது. இனி அங்கிருந்து விண்கலமானது, லாக்ரேன்ஜ் 1 பகுதியை நோக்கி பயணிக்கும். அந்த இடத்தில் பின்னர் நிலை நின்று சூரியனை ஆய்வு செய்யும்.
ஆதித்யாவை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி ராக்கெட் அதி நவீனமானதாகும். முந்தைய பிஎஸ்எல்வியை விட இது நவீனமானது. எக்எஸ்எல் வகை பிஎஸ்எல்வி ராக்கெட் இது. இதே வகை ராக்கெட்தான் முன்பு சந்திரயான் 1 விண்கலத்தையும் விண்ணில் செலுத்த உதவியது என்பது நினைவிருக்கலாம். அதேபோல 2013ம் ஆண்டு மூன் ஆர்பிட்டரையும் இதுதான் விண்ணில் செலுத்தியது.
சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஆதித்யா எல் 1 விண்கலத்தை இந்தியா விண்ணில் செலுத்தியுள்ளது உலகின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியுள்ளது.
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
{{comments.comment}}