சென்னை: சைதை துரைசாமி வேலை வெட்டி இல்லாதவர். அவருக்கு பல்வேறு கட்சிகளோடு தொடர்புகளை வைத்துக்கொண்டு அதிமுகவுக்குள் இழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். கூட்டணி தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அமிர்ஷாவை சந்தித்தாக கூறப்பட்டது. அதே போல அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோடையனும் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியிருந்தார்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் சென்னை முன்னாள் மேயருமான சைதை துறை சாமி அதிமுக விவகாரம் தொடர்பாக அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று சைதை துறை சாமி வலியுறுத்தி இருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியோ அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களை சேர்த்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என கூறிவரும் நிலையில், சைதை துறை பேசியதற்கு கே.பி.முனுசாமி காட்டமாக கூறியுள்ளார்.

இது குறித்து அதிமுக துணை பொதுச்செயலாளர் கே. பி. முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சைதை துறைசாமிக்கு எதிர்ப்பு வலுப்பதற்கு காரணம் களத்தில் இருக்கும் அதிமுக தொண்டர்கள். கட்சிக்காக அர்ப்பணித்து உழைக்கும் அதிமுகவினரை வேலை வெட்டி இல்லாத சைதை துரைசாமி விமர்சிக்கிறார். அவருக்கு பல்வேறு கட்சிகளோடு உள்ள தொடர்புகளை வைத்துக்கொண்டு அதிமுகவுக்குள் இழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
செங்கோட்டையன் எங்கள் கழகத்தில் முன்னோடி. அவர் அவருடைய பணிகளை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சில சந்தர்ப்பவாதிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். செங்கோட்டையன் டெல்லி சென்று நிதி அமைச்சரை பார்த்தார் அவ்வளவு தான். சிலர்தான் கண், மூக்கு வைத்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}