சென்னை : தமிழக சட்டசபை தேர்தலுக்கான அதிமுக.,வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி.கே.பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். இதில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஃபிரிட்ஜ், தீபாவளிக்கு விலையில்லா வேட்டி சேவை, பொங்கலுக்கு ரூ.1000 ரொக்கப் பரிசு என்பது உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
அதிமுக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் :
- ஒவ்வொரு அரிசி ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கும் இலவச ஃபிரிட்ஜ்
- அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் எண்ணெய் வழங்கப்படும்.
- கச்சத்தீவை மீட்க உறுதியான நடவடிக்கை
- கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்கள் தள்ளுபடி

- அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.10,000 உதவித்தொகை
- மீண்டும் 2000 அம்மா மினி கிளினிக்குகள் துவங்கப்படும்
- 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்
- ஜல்லிக்கட்டில் மாடு பிடிக்கும் வீரர்கள் உயிரிழந்தால் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
- இளைஞர்கள் தொழில் தொடர்ங்க ரூ.25 லட்சம் வழங்கப்படும்.
- வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க சட்டம் இயற்றப்படும்.
- தெரு நாய்களுக்கு சிறப்பு கருத்தடை திட்டம்
- கொத்தடிமை இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்
- மதம் மாறினாலும் பட்டியலின சமூக சலுகை தொடர நடவடிக்கை
- அறநிலையத்துறை கடைகளில் மாற்றுதிறனாளிகளுக்கு 5 % ஒதுக்கீடு
- பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய காவல் செயலி மற்ற மாவட்டங்களுக்கும் விரிவு செய்யப்படும்.
- பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க ரூ.25,000 மானியம்
- கஞ்சா, போதைப் பொருட்களை ஒழிக்க முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் அதிரடி துறை
- அனைத்து முக்கிய நகரங்கள், சுற்றுலா மையங்களில் இலவச வைஃபை
- அனைதஅது மாநகராட்சிகளிலும் சுற்றுச்சாலை அமைக்கப்படும்
- இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
- தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேரத்திலும் போக்குவரத்து, சரக்கு முனையம்
- சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்திட மத்திய அரசை வலியுறுத்துவோம்
- மீன்பிடி தடைக்கால உதவித்தொகை ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கு தனி பல்கலைக்கழகம்
- கிளாம்பாக்கம் வரை மெட்ரோ
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி, அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளோம். திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கலேக்சன், கரப்சன், கமிஷன் தான் திமுக.,வின் கொள்கை. திமுக தீயசக்தி. திமுக ஆட்சியின் தமிழகம் போதை மாநிலமாகி விட்டது என்றார்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?
3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!
மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!
Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!
2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!
சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!
6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்
{{comments.comment}}