சென்னை: சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நாளை அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை ஸ்ரீனாரு வஙெ்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் அதிமுக செயற்குழு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்ற உள்ளார்.
இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் , மாநில நிர்வாகிக், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பிரியாணி விருந்து நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தல் குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து வரும் 18ம் தேதிக்குள் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்திருந்தார். எனவே இது குறித்தும் நாளை நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
கடந்த 2 நாட்களாக அமைதியாக இருந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்தது... எவ்வளவு குறைவு தெரியுமா?
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.. அவ்வளவு நன்மைகள் உள்ளன கோவிலுக்கு செல்வதில்!
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
முதல் முறையாக.. சொன்ன நேரத்துக்கு முன்பே வந்து சேர்ந்த தவெக தலைவர் விஜய்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 09, 2025... இன்று வெற்றிகள் அதிகரிக்கும்
{{comments.comment}}