டெல்லி: டெல்லி சென்றுள்ள முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி யாரையும் சந்திக்க வரவில்லை என்று கூறியிருந்த நிலையில் திடீரென இன்று இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டுக்குப் போய் அவரை சந்தித்துப் பேசினார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோரும் சென்றிருந்தனர்.
பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியும், அதிமுக தலைவர்களும் கூறி வந்த நிலையில் நடந்துள்ள இந்த சந்திப்பு பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக - பாஜக இடையே மீண்டும் கூட்ணி வருகிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்தார். அப்போது மக்களை கவரும் விதமாக பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தார். மறுபுறம் வருவாய் ஈட்டக்கூடிய வகையில் எந்தத் திட்டங்களும் அறிவிக்கப்படாமல் தற்போது அறிவித்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்த முடியாது. வெற்று அறிவிப்புகள் என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக பட்ஜெட்டை விமர்சித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து மார்ச் 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து துறை ரீதியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென பயணமாக டெல்லி புறப்பட்டுப் போனார்.

டெல்லியில் உள்ள அதிமுக கட்டிடத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த கட்டிடத்தை தற்போது பார்வையிட டெல்லி சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி பாஜக மூத்த தலைவர்கள் யாரேனும் சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. ஆனால் பிரத்யேகமாக யாரையும் தான் சந்திக்க வரவில்லை என்றும் கட்சி அலுவலகத்தைப் பார்க்கவே வந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த நிலையில்தான் இன்று இரவு திடீரென உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டுக்குப் புறப்பட்டுப் போனார் எடப்பாடி பழனிச்சாமி. அவருடன் கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் சென்றிருந்தனர். இந்த சந்திப்பு எதற்காக என்று தெரியவில்லை. இதுதொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவும் இல்லை.
யார் வேண்டுமானாலும் இணையலாம் - அண்ணாமலை
பாஜக அதிமுக மீண்டும் இணைய இருப்பதாக ஏற்கனவே அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் இந்த சந்திப்பு பல்வேறு எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே இந்த சந்திப்பு குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அமித்ஷா நாட்டின் உள்துறை அமைச்சர். அவரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணையலாம். எந்தக் கட்சி வேண்டுமானாலும் வரலாம் என்று தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் அனலை கிளப்ப போகும் டாப் 10 பிரச்சனைகள்
அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
விடியா ஆட்சியில் விலகாத இருள்: பச்சிளம் குழந்தை முதல் பாட்டி வரை பாதுகாப்பற்ற சூழல்: தவெக
ரஜினிகாந்திடம் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
ஜனநாயகன் விவகாரம் முடிவுக்கு வருகிறதா? நாளை தணிக்கை குழு மறுஆய்வு
விஜய்க்கு துணை முதல்வர் பதவியா? செங்கோட்டையன் சொன்ன காட்டமான பதில்
தமிழகத்தில் மார்ச் 18 மற்றும் 19ம் தேதிகளில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதி...பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
தேர்தல் 2026 ஓட்டு போட சொந்த ஊருக்கு போறீங்களா? இதை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
{{comments.comment}}