70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?

Jul 30, 2026,04:57 PM IST

டெல்லி: பிரபல இந்தி நடிகர் தேவ் ஆனந்தின் மகனும் நடிகருமான சுநீல் ஆனந்த் (70) சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டிருந்த நிலையில், இரண்டாவது முறை ஏற்பட்ட மாரடைப்பு அவரது உயிரைப் பறித்துள்ளது.


இந்தச் செய்தி திரை உலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்திய அதே வேளையில், இரண்டாவது முறை வரும் மாரடைப்பு ஏன் முதல் முறையை விட மிகவும் ஆபத்தானது?" என்ற முக்கிய மருத்துவக் கேள்வியையும் விவாதத்தையும் எழுப்பியுள்ளது.


ஒருவருக்கு முதல்முறை மாரடைப்பு ஏற்படும்போதே, இரத்த ஓட்டம் தடைபடுவதால் இதய தசைகளின் ஒரு பகுதி சேதமடைகிறது. இதனால் இதயத்தின் சுருங்கி விரியும் திறன் குறைகிறது. இந்நிலையில் இரண்டாவது முறையாக மாரடைப்பு ஏற்படும்போது, ஏற்கனவே பலவீனமாக இருக்கும் இதயம் மேலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு செயலிழக்கும் அபாயம் பல மடங்கு அதிகரிக்கிறது.




முதல் மாரடைப்புக்குப் பிறகும் வாழ்க்கைமுறை மாற்றம், உணவுப் பழக்கம் அல்லது முறையான மருந்துகளைப் பின்பற்றத் தவறும்போது, இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் பிற தமனிகளிலும் அடைப்புகள் தீவிரமடைகின்றன. இரண்டாவது முறை ஏற்படும் அடைப்பு இதயத்தின் முக்கியப் பகுதிக்குச் செல்லும் இரத்தத்தை முற்றிலும் தடுக்கும் போது அது உடனடி உயிரிழப்புக்கு வழிகோலுகிறது.


இரண்டாவது மாரடைப்பின் போது இதயத்தின் மின் தூண்டுதல் மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, 'அரித்மியா' எனப்படும் சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். இது நொடிகளில் இதயத்தின் செயல்பாட்டை நிறுத்திவிடக்கூடும்.


ஒருமுறை மாரடைப்பு வந்தவர்கள், இரண்டாவது முறை அது வராமல் தடுக்கவும், இதய ஆரோக்கியத்தைப் பேணவும் சில அத்தியாவசிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.


மருத்துவர் பரிந்துரைத்த இரத்தத்தைக் மெலிதாக்கும் மருந்துகள், கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தக் கட்டுப்பாட்டு மருந்துகளைத் தவறாமல் எடுக்க வேண்டும்.


புகைபிடித்தல், மதுப் பழக்கம் இருந்தால் உடனடியாக முழுமையாகக் கைவிட வேண்டும்.


அதிக கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை உள்ள உணவுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும்.


தொடர் மன அழுத்தம் இரத்த அழுத்தத்தை உயர்த்தி இதயத்தைப் பாதிக்கும். தியானம், யோகா போன்ற பயிற்சி மூலம் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும்.


மருத்துவரின் ஆலோசனையோடு மிதமான நடைபயிற்சி அல்லது லேசான உடற்பயிற்சிகளை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.


முதல் மாரடைப்பு என்பது இதயம் தரும் ஒரு எச்சரிக்கை மணி. அதைச் சரியாக உணர்ந்து, முறையான மருத்துவ சிகிச்சையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் பின்பற்றுவதே இரண்டாவது மாரடைப்பிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் சிறந்த வழியாகும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்