- சசிகலா விஸ்வநாதன்
(அழகியசிங்கரின் என்பா)
முந்தை வினை முன்னின்று இழுக்க
பின்னை வினைகள் பின்னின்று தள்ள
என்னென்று சொல்லி நான் நொந்தேன்;
நம் வாழ்க்கை நம் கையில்?
உற்றோரும் உலகோரும் உதைத்து தள்ளும்
உருண்டு ஓடும் பந்து போல்
வெருண்ட நான், எங்கனம் நினைப்பேன்;
நம் வாழ்க்கை நம்கையில்?
பாசமுடன் பிள்ளைகளைப் பெற்று, வளரும்
பிள்ளைளே இரவும் பகலும் நினைவில்.
பின்னரும் நான் எப்படி பகருவேன்;
நம் வாழ்க்கை நம்கையில்.

கல்யாண நாள் முதல் கண்ணசைவில்
கட்டளைகள் பிறக்க, அடிபணியும்
நான் எப்படி சொல்வேன், இன்று;
நம் வாழ்க்கை நம் கையில்
நின்றாலும்; அத்தனையும் மறையும்; அத்தனவன்
அருளால், என்றிருக்க; நான் சொல்வேன்
நம் வாழ்க்கை நம்கையில்
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!
சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!
யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!
Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே
பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!
Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
{{comments.comment}}