சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கட்சி பேதம் இன்றி அனைத்து எம்.பிக்களும் ஆதரிக்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி

Aug 18, 2025,06:44 PM IST
திருவண்ணாமலை: தமிழகத்தைச் சார்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு துணை ஜானாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கு, கட்சி பேதம் இன்றி அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் 2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கும் இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று திருவண்ணாமலைக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். 



அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், பேசுகையில், தமிழகத்தை சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு துணை ஜானாதிபதி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தமிழகத்தை சார்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இது தமிழ்நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். 
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Poem: மருதாணி!

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்