திமுக.,வுடன் 100% பேச்சுவார்த்தை நடத்தவில்லை.. அடித்துச் சொன்ன இபிஎஸ்

May 13, 2026,06:13 PM IST

சென்னை: திமுக.,வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். 100 சதவீதம் திமுக., உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழக முதல்வர் அவ்வப்போது தனது தலைமையிலான அரசு "தூய்மையான ஆட்சி" நடத்தி வருவதாகக் கூறி வருவதை விமர்சித்துள்ளார். இதனைச் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, தற்போதைய நிகழ்வுகளை முன்வைத்து, "தூய்மையான ஆட்சி நடத்துவதாக முதல்வர் கூறினார்; இதுதான் அந்த தூய்மையான ஆட்சியா?" எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 


அரசின் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மையுடன் இல்லை என்பதை அவர் இந்த கேள்வியின் மூலம் மறைமுகமாகச் சாடியுள்ளார்.


திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்தும் எடப்பாடி பழனிசாமி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். ஒரு கட்சியின் தலைவர் எடுக்கும் முடிவுகள் மற்றும் செல்லும் பாதை மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிட்ட அவர், "தவறான பாதையில் தவெக தலைவர் சென்று கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். 




குறிப்பாக, ஒரு அரசியல் கட்சி இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டு நிற்கும் ஒரு இக்கட்டான சூழலில், மாநிலத்தின் முதல்வர் ஒரு தரப்பினரை மட்டும் நேரில் சென்று சந்திப்பது முறையல்ல என்று பழனிசாமி கூறியுள்ளார்.அரசியல் நடுநிலைமை தவறி, முதல்வர் ஒரு தரப்பிற்கு ஆதரவாகச் செயல்படுவது ஜனநாயகப் பண்புகளுக்கு எதிரானது என்றும், இது போன்ற செயல்கள் அரசியல் குழப்பங்களை விளைவிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


திமுக.,வுடன் பேசவில்லை :


திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது உண்மையா என கேட்கப்பட்ட கேள்விக்கு, சட்டென டென்ஷன் ஆன இபிஎஸ், "எத்தனை முறை சொல்வது? திமுக உடன் 100 சதவீதம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை" என திட்டவட்டமாக பதிலளித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!

news

Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!

news

கதை கேளு... கதை கேளு!

news

Malliga Selvaraj: அன்னை மடி!

news

தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

அதிகம் பார்க்கும் செய்திகள்