"அண்ணாமலையை மாத்துங்க".. டெல்லிக்குப் படையெடுத்த அதிமுக.. "ம்ஹூம்.. ரிஜக்டட்"!

Sep 23, 2023,12:45 PM IST

- மீனாட்சி


சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து அதிமுகவை விமர்சித்துப் பேசி வருவதாலும், மறைந்த  தலைவர்களை  கொச்சைப்படுத்தி பேசி வருவதாலும் அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதிமுக மூத்த அமைச்சர்கள் குழு டெல்லி சென்றது. ஆனால் அவர்களுக்கு சாதகமான பதிலைத் தர பாஜக தலைமை மறுத்து விட்டதாம்.


அதிமுக தலைவர்கள் முதலில் உள்துறை  அமைச்சர் அமித்ஷாவைத்தான் பார்க்க முயன்றார்களாம். ஆனால் அமித்ஷாவைப் பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரை மட்டுமே பார்த்தார்களாம்.


அதிமுக குழுவில், முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பெருத்த நம்பிக்கையுடன் டெல்லி கிளம்பிச் சென்ற இக்குழுவுக்கு பெரிய ஏமாற்றமே கிடைத்துள்ளதாம்.


பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்தாலும் அவ்வப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடுகள், (நாக்கை வெட்டுவேன்.. துப்பாக்கிப் பிடிச்ச கை இது போன்ற) வார்த்தைப் பிரயோகங்கள் 

நடைபெற்று வருகின்றன. இது கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் அளவில் வெறுப்பையும், கடுப்பையும் விதைத்து வளர விட்டு வருகிறது.


பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பேசும் கருத்துகள் பல நேரங்களில் கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்தும் விதமாகவே இருக்கிறது என்பது அதிமுகவின் குற்றச்சாட்டாகும். ஆனால் அண்ணாமலை எதார்த்தமாக பேசுகிறார்.. கூட்டணியில் இருப்பதால் மட்டுமே அவர்களுக்கு சாதமாக பேச வேண்டும் என்று நினைக்க முடியாது என்று பாஜகவினர் விளக்கம் தருகின்றனர். 


இருந்தாலும் இரு கட்சி தலைவர்களும் தொடர்ந்து சரமாரியாக ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுவதும் அதிகரித்தது. குறிப்பாக ஜெயலலிதாவை அண்ணாமலை கடுமையாக விமர்சித்துப் பேசியது அதிமுகவில் பெரும்   சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அண்ணாமலை தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவித்தார். அடுத்து அண்ணா குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலைக்கு எதிராக  முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம் ஆகியோர் கடுமையாக தாக்கிப் பேசினர். இதற்கு அண்ணாமலையும் கடும் பதிலடி கொடுத்தார். 


இவ்வாறு இரு கட்சிகளுக்கும் இடையே இருந்த பூசல் வெடித்து விஸ்வரூபம் எடுத்த நிலையில் எங்கிருந்து யாருக்கு என்ன மெசேஜ் வந்ததோ தெரியவில்லை.. திடீரென செல்லூர் ராஜு பம்மிப் பதுங்கிப் பேச ஆரம்பித்தார். "பாஜக, அதிமுக இடையே கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. அடுத்த பிரதமராக மோடி தான் வரவேண்டும். தமிழகத்திற்கு எடப்பாடி தான் அடுத்த முதல்வர்" என்று கருத்து தெரிவித்தார்.


ஆனால் அண்ணாமலையோ நான் இறங்கிப் போக மாட்டேன். தன்மானம் முக்கியம். கூட்டணியில் பிரச்சினை இல்லை என்று மீண்டும் தனது நிலையை வலியுறுத்தினார். மறுபக்கம் பாஜக தலைமையிலிருந்து அதிமுக தலைமைக்கு ஏதோ "ஒன்று" வந்திருக்கலாம் போல.. அதிமுக தலைமையும், அதன் தலைவர்களும் கப்சிப் பாகி விட்டனர். 


இந்தப் பின்னணியில்தான், முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி ஆகியோர் அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர். இவர்களை அமித்ஷா பார்க்க மாறுத்ததாக கூறப்படுகிறது. பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவையும் , மத்திய அமைச்சர் பியுஸ் கோயலையும் சந்துத்துள்ளனர். இவர்களிடம் பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


அதிமுகவினர் யாருக்கும் பாஜக தலைமை மீது எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அண்ணாமலைதான் குறுக்கே புகுந்து காரியத்தைக் கெடுக்கிறார். தொடர்ந்து விமர்சித்துப் பேசுகிறார். அவரை மாற்றினால்தான் கூட்டணிக்கு நல்லது என்று எடுத்துக் கூறினார்களாம். ஆனால் அண்ணாமலையை மாற்றுவது குறித்து நட்டா பேச மறுத்து விட்டாராம். 


அடுத்து என்ன நடக்கப் போகிறதோ.. பொறுத்திருந்து பார்ப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்