டெல்லி: டெல்லி வந்திருந்த ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையாகியுள்ளது. ஆனால் இதில் மத்திய அரசுக்குத் தொடர்பில்லை என்று இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக இருக்கும் அமீர் கான் முத்தகி டெல்லி வந்துள்ளார். நேற்று அவர் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். ஆனால் அதில் பெண் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆப்கானிஸ்தானில் பெண்கள் எந்த அளவுக்கு முடக்கப்பட்டுள்ளனர் என்பது உலகுக்கே தெரியும். இந்த நிலையில் பெண்களுக்கு மதிப்பு தரும் இந்தியாவில் அதிலும் தலைநகர் டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் நடத்திய செய்தியாளர் சந்திப்புக்கு பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஆனால் இதில் இந்தியாவுக்குத் தொடர்பில்லை என்று மத்திய அரசு விளக்கியுள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், பத்திரிகையாளர் சந்திப்பிற்கான அழைப்புகளை ஆப்கானிஸ்தான் துணைத் தூதரக அதிகாரி டெல்லியில் இருந்த குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களுக்கு அனுப்பியதாகவும், ஆப்கானிஸ்தான் தூதரகப் பகுதி இந்திய அரசின் அதிகார வரம்பிற்குள் வராது என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி எம். பிஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஆப்கானிஸ்தான் தலிபான் பிரதிநிதி இந்தியா வந்தபோது அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலிருந்து பெண் பத்திரிகையாளர்களை வெளியேற்றியது குறித்து உங்களது நிலைப்பாட்டைத் தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள்.
பெண்களின் உரிமைகளை நீங்கள் அங்கீகரிப்பது, ஒரு தேர்தலுக்கும் அடுத்த தேர்தலுக்கும் இடையில் பேசுவதற்காக மேற்கொள்ளப்படும் வசதிக்கேற்ற நிலைப்பாடு மட்டுமில்லை என்றால், நமது நாட்டில், அதாவது பெண்களைத் தங்கள் முதுகெலும்பாகவும் பெருமையாகவும் கொண்ட ஒரு நாட்டில், இந்தியாவின் மிகத் திறமையான சில பெண்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அவமதிப்பு எப்படி அனுமதிக்கப்பட்டது? என்று அவர் கேட்டுள்ளார்.
ராகுல் காந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மிஸ்டர் மோடி, ஒரு பொது அரங்கில் இருந்து பெண் பத்திரிகையாளர்களை விலக்க நீங்கள் அனுமதிக்கும்போது, அவர்களுக்காக நீங்கள் குரல் கொடுக்க முடியாத அளவுக்கு பலவீனமானவர் என்று இந்தியாவின் ஒவ்வொரு பெண்ணிடமும் சொல்கிறீர்கள்.
நம் நாட்டில், எல்லா இடங்களிலும் சமமான பங்களிப்பு பெறுவதற்கு பெண்களுக்கு உரிமை உள்ளது. இத்தகைய பாகுபாட்டின் முன் நீங்கள் அமைதியாக இருப்பது, நாரி சக்தி (பெண் சக்தி) பற்றிய உங்கள் முழக்கங்களின் வெற்றுத்தனத்தை அம்பலப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இதுகுறித்துக் கூறும்போது, பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், அந்த செய்தியாளர் சந்திப்பை ஆண் பத்திரிகையாளர்கள் புறக்கணித்து வெளியேறியிருக்க வேண்டும் என்றார்.
ஆப்கானிஸ்தான் அமைச்சரின் பிரஸ்மீட்டில் பெண்களுக்கு அனுமதி இல்லை.. கிளம்பிய சர்ச்சை!
என்னாது நோபல் அமைதிப் பரிசு லீக் ஆய்ருச்சா.. சூதாட்டக் கும்பல் அட்டகாசம்.. அதிர்ச்சியில் நார்வே
அனல் பறக்கும் மாதம்பட்டி விவகாரம்.. பாலைவன பூமியில் ஓய்வெடுக்கும் மனைவி ஸ்ருதி
பேசாம ஹனிமூனையும் கூட நீங்களே முடிவு செஞ்சு சொல்லிடுங்களேன்.. திரிஷா நச் பதிலடி!
அக்.,17ல் கரூர் செல்லும் விஜய்?... கல்யாண மண்டபத்தில் பாதிக்கப்பட்டோரை சந்திக்க திட்டம்!
ஐயா அப்பத்தாவே ஆணிவேர் !
பெரியார் வழியைக் காட்டிய தந்தை.. அடுத்தடுத்து படித்து.. அசர வைக்கும் பேராசிரியை மஞ்சரி!
அம்மாவுக்குள் இருந்த ஏக்கம்.. அவருக்கும் சேர்த்து வட்டியும் முதலுமாக மேடையில் கலக்கும் தன்யா!
பெண்கள் படிக்கணும்.. கத்துக்கிட்டே இருக்கணும்.. உதாரண நாயகியாக திகழும் டாக்டர் உஷா தண்டாயுதபாணி!
{{comments.comment}}