தங்கமே தங்கமே.. நேத்து இறங்குச்சா.. இன்னிக்கு ஏறிருச்சு.. வச்சு செய்யுதே.. பெண்கள் அயர்ச்சி!

Apr 24, 2024,06:14 PM IST

சென்னை: தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. நேற்று சர்ரென்று சூப்பராக விலை குறைந்த தங்கம் இன்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இன்று ஒரு சவரன் ரூ.240 உயர்ந்து ரூ.53840க்கு விற்கப்படுகிறது.


கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த விலை ஏற்றம் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. இதனால் நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். நகை விலை ஏற்றம் கண்டதால் பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர். இந்நிலையில், ஏப்ரல் 22, 23 ஆகிய இரண்டு நாட்களும் தங்கம் விலை குறைந்திருந்தது. அதுவும் நேற்று ஒரு நாள் மட்டும் சவரனுக்கு ரூ.1,160 குறைந்திருந்தது. இந்த விலை குறைவால் நகைப்பிரியர்கள்  மகிழ்ச்சி அடைந்தனர்.


ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரு நாள் மட்டுமே நிலைத்தது பாஸ்! நேற்று அதிரடியாக குறைந்த தங்கம் இன்று மீண்டும் உயர்ந்து விட்டது. மீண்டும் தங்கம் விலை உயர்ந்ததால் மீண்டும் நகை வாங்குபவர்களிடையே சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நகை விலை உயர்ந்தாலும் குறைந்தாலும் தேவை மட்டும் அதிகரித்து கொண்டே வருவதினால் திருமண வைபவங்கள் வைத்துள்ளவர்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். 




நகை விலை உயர்வு இன்னும் உயரவே வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருத்தும் தெரிவித்து வருவதால், செல்வந்தர்கள் நகைகளை வாங்கி சேமிக்க தொடங்கியுள்ளனர். நகை வாங்கி சேமிப்பவர்களுக்கு இந்த விலை ஏற்றம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


இன்றைய தங்கம் விலை...


இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6730 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 30 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.240 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,840 ரூபாயாக உள்ளது. 


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7342 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.5873 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்துள்ளது. 


வெள்ளி விலை...


வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளியின் விலை நேற்றைய  விலையை விட இன்று  0.10 காசுகள் குறைந்து இன்று 1 கிராம் வெள்ளி விலை 8.40 ரூபாயாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 691 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 குறைந்து ரூ.86.400 க்கு விற்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்