யாரை காப்பாற்றத் துடிக்கிறது இந்த திமுக அரசு? முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

Jun 03, 2025,11:31 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


 அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரனை கைது செய்தனர். மேலும் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் ஆளும் கட்சிக்கு தொடர்புடையவர் என  கூறி இந்த வழக்கு சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது‌. ஆனால் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, கடந்த மார்ச் மாதம் முதல் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 75 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவி உட்பட 29 பேர் வாக்குமூலம் அளித்தனர். 


இந்நிலையில், ஞானசேகரன் குற்றவாளி என்பது உறுதியாகியது. குற்றவாளி ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதால் 11 குற்றங்களுக்கும் தனித்தனியாக தண்டனை விபரங்களை நீதிபதி அறிவித்துள்ளார். அதில், அதிகபட்ச தண்டனையாக 30 ஆண்டுகளுக்கு தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனையாக 30 ஆண்டுகுளுக்கு தண்டனைக் குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனையை ஞானசேகரன் அனுபவிக்க வேண்டும் என்றும், அதேபோல் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.




இந்த தீர்ப்பு நல்ல வரவேற்பை பெற்றநிலையில், எதிர்கட்சிகள் பலர் யார் அந்த சார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், 


அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கில், திமுக நிர்வாகி ஞானசேகரனுக்கு, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. 


எனினும், இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள், இன்னமும் எஞ்சியிருக்கின்றன.


யாரை காப்பாற்றத் துடிக்கிறது இந்த திமுக அரசு? 


சில விடைகளும், பல கேள்விகளும்!  என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் வீடியோ பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் வணக்கம். நான் இந்த காணொலி வாயிலாக உங்களிடம் சில கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன். கடந்த ஆண்டு டிச.23ம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது. இது  நமக்கு தெரியும். தொடர்ந்து, இதுகுறித்து பலரும் பேசினர். நானும் பேசினேன். இதனையடுத்து 25ம் தேதி மாலை ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். அன்றைய தினம் இரவு ஞானசேகரன் யார்? எந்த கட்சியைத் தேர்ந்தவர்? யார் யாருடன் தொடர்பு உள்ளது? என்பதை உங்கள் முன்னாள் வைத்தோம்.


அனைத்து அரசியல் கட்சியினரும் இதுகுறித்து பேசினர். நான் அரசியல் பேச வரவில்லை. தற்போது, CDR (Call Detail Record) ஆதாரத்தின் அடிப்படையில் பேசப்போகிறேன். தற்போது பேசவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஞானசேகரன் 25ம் தேதி கைது செய்யப்பட்ட நிகழ்வுகளை நாம் பார்த்தோம். எஃப்ஐஆர் கசியவிடப்பட்டது. 27ம் தேதி நான் ஒரு அரப்போராட்டத்தை முன்னெடுத்தேன். அதன்பிறகு அண்ணா பல்கலைக்கழகம் பாதுகாப்பை அதிகப்படுத்துவதாக தெரிவித்தனர். சென்னை உயர்நீதிமன்றம் எஸ்ஐடி (SIT) மூலம் கண்காணிக்க தொடங்கினர். தற்போது 5 மாதங்களுக்குப் பிறகு குற்றவாளியான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகால கடுங்காவல் தண்டனை வழங்கப்படுவதாக தீர்ப்பு வந்துள்ளது. அன்று பேசியதை தான் இன்றும் பேசப்போகிறேன்.


குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு அந்த வேலையை முழுமையாக செய்துள்ளதாக என்பதை தான் அன்றிருந்து கேட்டுக்கொண்டுள்ளோம்.  டிச.23ம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்தது. 24ம் தேதி போலீசார் ஞானசேகரனை கைது செய்தனர். பின்னர் அவரை விட்டு விட்டனர். தொடர்ந்த, 25ம் தேதி மீண்டும் அவரை கைது செய்தனர். இதனை நான் உங்கள் முன்னாள் வைக்கிறேன். ஏன் அவரை வெளியே விட்டார்கள்? இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்கள்? எதற்காக திமுக வில் சிலருக்கு பதற்றம்? எங்கெல்லாம் ஆதாரத்தை அழித்திருக்க வாய்ப்புள்ளது?


ஞானசேகரன் போன் ஃபிளைட் மோடில் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஃபிளைட் மோடில் இருந்து எடுத்த பிறகு சரியா 8.55க்கு ஞானசேகரன் முதலாவதாக ஒரு காவல் அதிகாரிக்கு கால் செய்துள்ளார். சம்பவம் நடந்த பிறகு ஞானசேகரன் ஏன் காவல் அதிகாரிக்கு கால் செய்தார்? பின்னர் 6 நிமிடங்கள் கழித்து 9.01க்கு காவல் அதிகாரி ஞானசேகரனுக்கு போன் செய்தார். எதற்காக? இதுகுறித்து விசாரணை செய்தீர்களா? மே 16ம் தேதி ஞானசேகரன் மீது சிபிசிஐடி இரண்டாவது எஃப்ஐஆரை பதிவு செய்தனர். இதுபோல் வேறு எந்த பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளனரா? அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுபோன்று வேறு ஏதேனும் சம்பவம் நடந்துள்ளதா? மே 16ம் தேதி பதிவு செய்த எஃப்ஐஆரை ரகசியமாக வைத்துள்ளனர்.


குற்றம் செய்த பிறகு டிச. 24ம் தேதி அந்தப்பகுதி வட்டச்செயலாளர், திமுகவின் மூத்த தலைவர் கோட்டூர் சண்முகத்துடன் சுமார் 6 முறை ஞானசேகரன் போனில் பேசியதாக சிடிஆர் கூறுகிறது. அன்று காலை 7.27 முதல் மாலை 4.01 வரை 5 முறை பேசியுள்ளார். அன்றைய தினம் எதற்காக ஞானசேகரனை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்? பின்னர் ஏற் வெளியே வீட்டீர்கள்? ஆதாரங்களை அழிக்கவா? அன்றிரவு ஞானசேகரன் காவல்நிலையத்தில் இருந்து வெளியே வந்தபிறகு 8.30 மணிக்கு கோட்டூர் சண்முகமும், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும் பேசினர். பின்னர் இருவரும் மீண்டும் 8.32 மணிக்கு பேசினர். எதற்காக? யாரை காப்பாற்ற இவ்வளவு பதற்றம்? அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள அதிகாரி நடராஜன் என்பவரும், கோட்டூர் சண்முகமும் டிச.23,24,25,26 ஆகிய 4 நாட்கள் பேசினர். இந்த நாட்களில் இருவரும் 13 முறை பேசி இருக்கின்றனர். முன்னதாக கூறியதுபோல், டிச.24 அன்று ஞானசேகரன் காவல்நிலையத்தில் இருந்து வெளியே வந்தபிறகு 8.34க்கு கோட்டூர் சண்முகமும், ஞானசேகரனும் பேசினர். பின்னர். 8,59க்கு கோட்டூர் சண்முகம் வேறொரு காவல் அதிகாரிக்கு போன் செய்தார்.


தொடர்ந்து, 9.07க்கு மீண்டும் கோட்டூர் சண்முகம் காவல் அதிகாரியிடம் பேசினார். இதெல்லாம் டிச. 24ம் தேதி இரவில் நடந்தது. அன்று ஆதாரம் அழிக்கப்பட்டது. காவல் நிலையத்தில் இருந்த வெளியே வந்த ஞானசேகரன் ஆதாரத்தை அழித்திருக்கிறார். நான் புதிதாக எதையும் சொல்லவில்லை. தமிழ்நாட்டில் எஸ்ஐடி பதிவு செய்த எஃப்ஐஆரில் ஆதாரத்தை அழித்ததற்காக ஒன்றை போட்டுள்ளனர். என்ன ஆதாரம் அழிக்கப்பட்டது? ஞானசேகரனை கைது செய்த பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என சொல்கின்றனர். ஞானசேகரன் மற்றொரு பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது மே16ம் தேதி தான் தெரிகிறது.


இது குறித்து கோட்டூர் சண்முகம், அவர் பேசிய காவல்துறை அதிகாரி, அமைச்சர் மா. சுப்பிரமணியத்திடம் எஸ்ஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினீர்களா? அதே 24ம் தேதி இரண்டு காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து எஃப்ஐஆர் வேண்டாம் என்றும் எஃப்ஐஆர் போட்டார் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடும் எனவும் கூறியதாக அவரின் தரப்பு வழக்கறிஞர் கூறுகிறார். இதை அனைத்தையும் நான் உங்கள் முன்னாள் கொண்டு வந்திருக்கிறேன். இன்னக்கி நாம் கேட்கக்கூடிய கேள்விகள் யார் அந்த சார்? அதே கேள்வியை நாம் திரும்ப கேட்கிறோம். இந்த வழக்கில் கோட்டூர் சண்முகம், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டிய நபர். இதை ஏன் முதலமைச்சர் மறைக்கிறார்? டிச.24ம் தேதி பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அங்குதான் யார் அந்த சார்? ஒழிந்திருக்கிறார். நான் எதற்கும் பயப்பட மாட்டேன். நான் இதனை விடமாட்டேன். தொடர்ந்து கேள்விகள் கேட்போன் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்