சென்னை: தீபாவளியை முன்னிட்டு வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள அமரன் படத்துக்கு அடுத்தடுத்து பாராட்டுக்கள் குவிந்து கொண்டுள்ளன. சிவகார்த்திகேயனின் அற்புதமான நடிப்பை பாராட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அமரன். இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரித்துள்ளார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுளள இப்படத்தில் முகுந்தன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருடைய மனைவியாக சாய்பல்லவி நடித்துள்ளார்.

ஒரு பக்கம் காதல் இன்னொரு பக்கம் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற முனைப்பு. இப்படியே தொடரும் கதைக்கு மத்தியில் பெண் வீட்டார் சம்பந்தத்துடன் இந்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாய் பல்லவியை திருமணம் செய்கிறார் சிவகார்த்திகேயன். இதன் பின்னர் ராணுவத்திலும் இணைந்து, தொடர்ந்து கேப்டனாகவும் பதவி உயர்வு பெறுகிறார். ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியை முகுந்தன் கொலை செய்கிறார். இதனால் அந்த குற்றவாளியின் தம்பி இந்திய ராணுவத்தை அழிக்க திட்டம் தீட்டுகிறார். இத்திட்டம் வெற்றி பெற்றதா..? அல்லது முகுந்தன் கொலை செய்யப்படுவாரா..? என்பதை மிகவும் நேர்த்தியான வடிவில் அமைத்து அழகான கதை களத்தை பிரதிபலித்துள்ளது அமரன் திரைப்படம்.
900 தியேட்டருக்கு மேல் உலகம் முழுவதும் வெளியான அமரன் படம் விமர்சன ரீதியாக மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. முதல் நாளிலேயே கிட்டத்தட்ட 50 கோடி அளவுக்கு வசூலித்து அசத்தியது அமரன்.

அமரன் படத்தில் சிவகார்த்திகேயனின் நேர்த்தியான நடிப்பை பாராட்டி, மேன்மேலும் இப்படத்திற்கு வாழ்த்து மழை குவிந்து வருகின்றன. அமரன் படம் வெளியாவதற்கு முதல் நாள் இப்படத்தை முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பார்த்துப் பாராட்டு தெரிவித்திருந்தனர்.
அமரன் அடைந்திருக்கும் வெற்றி மக்கள் நல்ல படத்தை கொண்டாடுவார்கள் எனும் எனது நம்பிக்கையை உறுதி செய்து இருக்கிறது என நடிகரும் இப்பட தயாரிப்பாளருமான கமல்ஹாசனும் பாராட்டியிருந்தார். மேலும் படத்தில் நடித்த கலைஞர்கள், இசையமைப்பாளர் உள்ளிட்டோரையும் பாராட்டியிருந்தார் கமல்ஹாசன்.

அந்த வரிசையில் அமரன் பட வெற்றிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று தயாரிப்பாளரும் நடிகருமான கமல்ஹாசனை தொடர்பு கொண்டு தொலைபேசியில், இப்படத்தை தயாரித்ததற்காக மனமார்ந்த பாராட்டுக்கள் என கமலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் அமரன் பட நாயகன் சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் ஆர் மகேந்திரன், ஒளிப்பதிவாளர் சாய் உள்ளிட்ட அமரன் பட குழுவினரை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த்தை, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக் குழுவினர் நேரில் சந்தித்தும் வாழ்த்து பெற்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}