கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல... அதுக்குள்ள Z பிரிவு y பிரிவு ... மறைமுகமாக தவெகவை தாக்கிய சீமான்!

Jul 28, 2025,08:34 PM IST

சென்னை:  கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்லை. அதுக்குள்ள Z பிரிவு, Y பிரிவு  பாதுகாப்பு வழங்குகின்றனர் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


கடந்தாண்டு கட்சி ஆரம்பித்த தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்து வந்தார் நாதக ஒருங்கணைப்பாளர் சீமான். சீமானின் விமர்சனத்தினால் தவெக கட்சியினர் கடுமையாக கோபம் அடைந்தனர். இருப்பினும் தவெக தலைவர் விஜய் சீமானை எதிர்த்து எதுவும் பேசாமல் இருந்து வந்தார். அதன்பின்னர் சீமானின் பிறந்த நாளுக்கு விஜய் வாழ்த்தி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டார். அதற்கடுத்து சில காலம் விஜய் குறித்து விமர்சனம் செய்வதை தவிர்த்து வந்த சீமான், தற்போது விஜய் குறித்து மறைமுகமாக விமர்சனம் செய்து பேசியுள்ளார். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று தவெக தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


சென்னை அடுத்த பம்மலில் காமராஜரின் பிறந்தநாள் விழாவை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில்,  ஒன்னுமே இல்ல, கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்லை. அதுக்குள்ள Z பிரிவு, Y பிரிவு  பாதுகாப்பு. சிரிக்காதீர்கள், சத்தியத்தின் மகன் நான் சத்தியம் தான் பேசுவேன். ஒன்னுமே இல்லாத நபர்களுக்கு எல்லாம் பாதுகாப்பு அப்படி துப்பாக்கி, இப்படி துப்பாக்கி என வழங்குகிறார்கள்.




அரசு பணத்தை வீணடிக்காமல் ஒரே ஒரு வாகனத்தில் பயணித்தவர் காமராஜர். அப்படி ஒரு தலைவன் வாழ்ந்தான் என்றால் நம்பமுடிகிறதா? வாழ்ந்தான் அவரை போன்றே இன்னொரு தலைவன் வாழ்வான். அது அவர் பேரன் சீமான் தான். வேறு யாராலும் வாழ முடியாது.


சிலர் கேட்கலாம், சீமான் உங்களுக்கு நிறைய மிரட்டல்கள் இருக்கின்றன, உங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென வலியுறுத்துவார்கள். டேய், நாட்டுக்கே நான் தான் பாதுகாப்பு, எனக்கு எதுக்குடா பாதுகாப்பு. ஒரு தலைவன் தன் உயிருக்கு பயந்தால், அவன் எப்படி மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பான். உயிருக்கு பயப்படுபவன் எப்படி நாட்டிற்கு தலைவன் ஆக முடியும். நாட்டிற்காக, மக்களுக்காக யார் உயிரையே கொடுக்க துணிந்தார்களே அவர்கள் தான் நாட்டின் தலைவர்கள். அப்படி இருந்தவர் தான் எங்கள் தாத்தன் காமராஜர். வேறு யார் அப்படி இருந்தார்கள்? எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் அவரது புகழை பாடிக்கொண்டே இருக்கலாம். உலகத்தில் இப்படி ஒரு தலைவன் வாழ்ந்திருக்கிறானா என்று.


இப்படியெல்லாம் பேசுவதால் எனது சொந்தக்காரர்கள் ஓட்டு போட்டுவிடமாட்டார்கள். இந்தியாவிலேயே ஒரு அரசியல் தலைவன் சொந்த சாதியாலேயே நிராகரிக்கப்பட்ட ஒரே தலைவன் நான் மட்டும் தான். எனது சாதிக்காரர்கள் யாருமே ஓட்டு போடாமல், 36 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகளை பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக வந்து நிற்கிறேன். காமராஜருக்கு உண்மையான பேரனாக இருந்து ஒருவனாவது உழைக்க வேண்டும் என்றே எனது சாதிக்காரர்களே என்னை புறந்தள்ளிவிட்டனர். காமராஜர் ஜாதி தலைவர் அல்ல. சாதித்த தலைவர். தேசிய இனத்தின் பெரும் தலைவர் காமராஜர் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று முதல் ஆக., 3ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல... அதுக்குள்ள Z பிரிவு y பிரிவு ... மறைமுகமாக தவெகவை தாக்கிய சீமான்!

news

ஆபரேஷன் மகாதேவ் அதிரடி.. காஷ்மீரில் ராணுவ வேட்டையில்.. 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

news

காப்புரிமை விவகாரம்: இளையராஜா மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

news

திமுக அரசு குற்றம் நடைபெறாமல் தடுப்பதில்லை, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதுமில்லை: அண்ணாமலை

news

BCCI.. மாத்துறோம்.. மொத்தமா மாத்துறோம்.. இங்கிலாந்து தொடருக்குப் பிறகு.. பிசிசிஐ முடிவு!

news

திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!

news

60 வயதிலும் 20 வயது இளைஞர் போல இருக்கணுமா.. அப்படீன்னா இதை பாலோ பண்ணுங்க!

news

துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு காந்தா படத்தின் டீசர் வெளியீடு!

அதிகம் பார்க்கும் செய்திகள்