சென்னை: தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் பாஜக கூட்டணி முறிவை திருவிழா போல கொண்டாடிக் கொண்டுள்ளனர். இப்பவே எங்களுக்கு தீபாவளி வந்துருச்சு என்று அவர்கள் கொண்டாடுவதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.
ஒரு கூட்டணி உருவாகும்போதுதான் அதைக் கொண்டாடுவார்கள். குறிப்பாக ஜெயலலிதாவுடன் முதல் முறையாக தேமுதிக கூட்டணி வைத்தபோது அதை இரு கட்சியினரும் அப்படிக் கொண்டாடித் தீர்த்தனர். தேமுதிகவினரை விட அதிமுகவினர்தான் அதிகமாக கொண்டாடினார்கள்.
இப்போது அதே அளவிலான கொண்டாட்டத்தை பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டதை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இது வித்தியாசமாக இருக்கிறது. எந்த ஒரு கூட்டணி முறிவையும் தமிழ்நாடு கொண்டாடி இதுவரை பார்த்ததில்லை என்பதால் மக்களுக்கும் கூட இது ஆச்சரியமாகவே இருக்கிறது.
இந்த அளவுக்குக் கொண்டாடுகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு அவர்கள் சிரமப்பட்டுள்ளனர், கஷ்டப்பட்டுள்ளனர் என்றுதானே அர்த்தம் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது. அதிமுகவினரும் கூட இதையே தெரிவிக்கின்றனர்.
பாஜக உடன் கூட்டணியை முறித்துக் கொண்டது குறித்து பெண் தொண்டர் ஒருவர் கூறுகையில்,லேடியா மோடியா என்று கேட்ட கட்சி இது. எங்களால்தான் வளர்ந்தது பாஜக. எங்களது அம்மாவையே அவமானப்படுத்திப் பேசிய அண்ணாமலையை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. இனி பாருங்க எங்களோட செயல்பாடுகளை என்று ஆவேசமாக கூறினார்.
இன்னொரு தொண்டர் கூறுகையில், எங்களால்தான் பாஜகவுக்கு வலிமையே கிடைத்தது. நாங்கள் கூட்டம் நடத்தும் போதெல்லாம் பத்தே பத்து பாஜகவினர்தான் வருவார்கள். கையில் பெரிய சைஸ் கொடியை மட்டுமே கொண்டு வருவார்கள்.. கூட்டம் நாங்கள் தான். இதுதான் அவர்களின் பலம். அவர்களால்தான் கடந்த தேர்தலில் நாங்கள் ஆட்சியை இழந்தோம். இனி வரும் நாடாளுமன்றத்தில் 39 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும். அதை அனைவரும் பார்ப்பீர்கள் என்றார்.
#நன்றி_மீண்டும்வராதீர்கள்
சமூக வலைதளங்களிலும் கூட #நன்றி_மீண்டும்வராதீர்கள் என்ற ஹேஷ்டேக்கை அதிமுகவினர் டிரண்ட் செய்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் விதம் விதமாக இந்தப் பிரிவைக் கொண்டாடி வருகின்றனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடுகின்றனர்.
வழக்கமாக தேர்தல் வெற்றியின்போதுதான் அதிமுகவினர் இப்படி வெறித்தனமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் இப்போது அவர்கள் கொண்டாடுவதைப் பார்த்து தமிழ்நாடே ஆச்சரியமாகப் பார்க்கிறது.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}