சென்னை : அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நவம்பர் 6ம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதில் தவெக மாநாட்டில் விஜய் பேசியதன் தாக்கம் இருக்குமா என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நவம்பர் 6ம் தேதி, அக்கட்சியின் தலைமை செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளதாகவும், முக்கிய முடிவுகள் பலவும் எடுக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் விக்கிரவாண்டியில் நடைபெற்ற விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, பெரும் பேசு பொருளாக அமைந்துள்ளது. மாநாட்டில் பேசிய விஜய், திமுக.,வை நேரடியாக தாக்கி பேசிய போதிலும், அதிமுக., பற்றி எதுவும் பேசவில்லை. மாறாக எம்ஜிஆரை புகழ்ந்து தான் பேசினார். அதே போல் விஜய்யின் பேச்சை திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்த போதிலும், அதிமுக., அது பற்றி பெரிதாக கருத்து தெரிவிக்கவில்லை.
அதை விட முக்கியமானது, மாநாட்டின் இறுதியில் யார் கூட்டணிக்கு வந்தாலும் அதை ஏற்க தயாராக இருப்பதாகவும், தங்கள் கட்சி தனி மெஜாரிட்டி பெற்றாலும் கூட்டணி கட்சிக்கு ஆட்சியின் பங்கு அளிக்கப்படும் என்று அறிவித்தார். இது தமிழகத்தின் பல கட்சிகளையும் தீவிரமாக யோசிக்க வைத்துள்ளது. விஜய் கூட்டணியில் இணைவோமா என ஏற்கனவே பல கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சமயத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட உள்ளதால், அதிமுக.,வும் அது பற்றி ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளே கூட வெளியில் விஜய்யை கடுமையாக விமர்சித்து வந்தாலும் கூட உள்ளுக்குள் விஜய் கூறிய யோசனை குறித்து ஆலோசித்து வருவதாகவே சொல்கிறார்கள். என்ன ஒன்று, கூட்டணி ஆட்சி என்பதை வெளிப்படையாக சொல்லாமல் சூசகமாக கூறியிருக்கலாம்.. அல்லது தனிப்பட்ட முறையில் தங்களிடம் ரகசியமாக அதைப் பற்றி பேசியிருக்கலாம் என்பதுதான், விஜய்யின் பேச்சை தீவிரமாக எதிர்த்து வரும் கட்சிகளின் ஆதங்கம் என்றும் சொல்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}