சென்னை: விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் இருப்பதாகவும், அந்த ரகசியத்தை இதுவரை சொல்லவில்லை எனவும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுக் கூட்டத்தில் கிண்டலாக பேசியுள்ளார்.
லோக்சபா தேர்தல்காக பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும், ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வேட்பாளர் குழுக்களை நியமித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு நான் முதலமைச்சராக பொறுப்பேற்றேன். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு க ஸ்டாலின் எங்களை மிகவும் ஏளனமாக விமர்சனம் செய்தார். எங்கள் ஆட்சி ஒரு மாதம் காலம் கூட தாக்கு பிடிக்காது என கிண்டலடித்தார்.
ஆனால் மக்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஆகியோரின் ஆதரவில் நான்கு வருடம் மற்றும் இரண்டு மாதம் சிறப்பான ஆட்சியை நடத்தியது அதிமுக அரசு. தற்போது நாங்கள் தமிழகத்தில் எங்கு சென்றாலும் அதிமுகவின் ஆட்சி பொற்காலமான ஆட்சி என்று சொல்லும் அளவிற்கு சிறப்பாக செயல்படுத்தி வந்தோம்.
இன்றைக்கு விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வதற்காக ரகசியம் எங்களிடம் உள்ளது என்று சொன்னார். ஆனால் இதுவரை அந்த ரகசியத்தை அவர் சொல்லவில்லை. பின்னர் ஒரே ஒரு கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்து, இதற்காக பல லட்சம் கையெழுத்துக்களை மக்களிடமிருந்து பெற்றார். இந்த கையெழுத்துக்களை சரியான முறையில் பயன்படுத்தினாரா என்றால் அதுவும் இல்லை.
சமீபத்தில் சேலத்தில் இளைஞர் அணி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பல்வேறு தரப்பினரிடமிருந்து நீட் தேர்வு ரத்து செய்வதற்காக வாங்கப்பட்ட கையெழுத்துகள் எல்லாம் கீழே கிடந்தது. ஒரு குப்பை போல கையெழுத்துக்கள் அனைத்தும் காலில் மிதி பட்டதை நாங்கள் கவனித்தோம். இதுதான் நீட் தேர்வு ரத்து செய்வதற்கான ரகசியமா என்று சாடினார் எடப்பாடி பழனிச்சாமி.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
Tamil Poem: மருதாணி!
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}