மதுரை: விஜய்யின் மாநாட்டால் அதிமுகவிற்கு எள்முனையளவும் பாதிப்பு கிடையாது. திமுகவுக்கு தான் பாதிப்பு ஏற்படும். அதிமுகவின் போராட்டத்தின் மறுவடிவமாகத்தான் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டை பார்க்கிறோம். எங்கள் எண்ணம் ஒன்றாக இருக்கிறது. எங்கள் எதிரிகளும் ஒன்றாக இருக்கிறது. மக்கள் நலன் என்ற சிந்தனை ஒன்றாக இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பிஉதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் ஆர்.பி. உதயக்குமார் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 2000 தொண்டர் படையினர் சீருடையுடன் வரவேற்பு அளிக்க உள்ளனர். இதற்கான பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
விக்கிரவாண்டியில் நடிகர் விஜய் நடித்திய தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு சிறப்பான துவக்கம். பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்தியிருக்கிறார். இந்த விழாவிற்கு இளைஞர்கள் தன்னெழுச்சியாக பங்கேற்றுள்ளனர். 10 நாட்களுக்கு முன்னர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை, திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அதிமுக உண்ணாவிரதத்தில் இளைஞர்கள் பங்கேற்றனர். ஆகையால் இளைய சமுதாயம் திமுகவுக்கு எதிராக இருக்கிறது.
ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டு மன்னர் ஆட்சிக்கு மகுடம் சூட்டுவதை ஏற்கவில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே இளைஞர்கள் அதிமுக உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். தற்போது நடிகர் விஜய் மாநாடும் இந்த செய்தியையே சொல்கிறது. திமுக மிருக பலத்துடன் இருப்பதால் அனுபவம், தகுதி, உழைப்பு இல்லாமல் வாரிசு அரசியலாக உதயநிதி முன்னிறுத்தப்படுகிறார். இதனை எல்லாம் எதிர்த்து தான் இளைய சமுதாயம், விஜய் மாநாட்டில் தன்னெழுச்சியாக பங்கேற்றுள்ளனர்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதுதான் அண்ணா திமுக கோட்பாடு. இதனை எம்ஜிஆர் தான் முதன்முதலாக தமிழ்நாட்டு மக்களுக்கு தனி இயக்கம் தொடங்கி தெரிவித்தார். எம்ஜிஆரை, நடிகர் விஜய் தன் மாநாட்டில் சுட்டிக்காட்டி பேசியதை வரவேற்கிறோம்.
தமிழ் சினிமா துறை இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் ஆக்டோபஸ் பிடியிலே சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறது. தொழில்துறையும் கருணாநிதி குடும்பத்தின் பிடியில் சிக்கி இருக்கிறது. இதே நிலைமை தொடர்ந்தால் தமிழ்நாடு துன்பப்படும் துயரப்படும்.
விஜய் திரைப்படத்திற்கு சிக்கல் வந்தபோது எடப்பாடி பழனிசாமி உடனடியாக தாய் உள்ளத்துடன் உடனடியாக அவரது கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்தார். எடப்பாடியின் கருணை உள்ளத்தை தெரிந்து கொண்டதாலேயே நடிகர் விஜய் விமர்சிக்கவில்லை என்பது யதார்த்தமான உண்மை. திமுகவிற்கு முடிவுரை எழுத எடப்பாடி பழனிசாமி மனஉறுதியுடன் நின்று போராடுகிறார். திமுகவுக்கு இருக்கிற எதிர்ப்பு அலை காட்டுத்தீயாக இருக்கிறது.
விஜய் மாநாட்டிற்கு கலந்து கொண்டவர்கள் அரசு மீதான வெறுப்பால் கலந்துகொண்டவர்கள். இது அதிமுகவிற்கு எள்முனையளவும் பாதிப்பு கிடையாது. திமுகவுக்கு தான் நடிகர் விஜய்யால் பாதிப்பு ஏற்படும். அதிமுகவின் போராட்டத்தின் மறுவடிவமாகத்தான் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டை பார்க்கிறோம். எங்கள் எண்ணம் ஒன்றாக இருக்கிறது. எங்கள் எதிரிகளும் ஒன்றாக இருக்கிறது. மக்கள் நலன் என்ற சிந்தனை ஒன்றாக இருக்கிறது.ஒவ்வொரு மனிதனுக்கும் வீடும் உணவும் வேலையும் வேண்டும் என்றார் விஜய். இதனை திட்டங்களால் செயல்படுத்த முடியும். இது வரவேற்கத்தக்கதுதானே என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிரித்து மேய்ந்த பிரேவிஸ்.. சொதப்பிய கேப்டன் தோனி.. பெரிய ஸ்கோரை எட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}