சென்னை: அரசியல் கட்சிகளிலேயே அதிக அளவிலான தொகுதிகளில் போட்டியிடும் பெரிய கட்சியாக அதிமுக உருவெடுத்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 33 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.
பலத்த வெற்றி வாய்ப்புள்ள கட்சியான திமுக கூட இவ்வளவு அதிக தொகுதிகளில் போட்டியிடவில்லை. ஏன் பாஜக கூட போட்டியிடவில்லை. ஆனால் அதிமுக அதிக தொகுதிகளில் போட்டியிடுவது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலை இன்று வெளியிட உள்ளது அக்கட்சி. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தனி அணி போட்டியிடுகிறது. இந்த அணியில் தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு நேற்றுடன் முடிவடைந்தது.

இதில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு இடம் என ஒதுக்கியது போக மீதம் உள்ள 33 தொகுதிகளிலும் அதிமுகவே களம் காண்கிறது. அதிமுக நேற்று தனது முதல் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது. 16 பேர் கொண்ட அந்த பட்டியலில் முக்கிய வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில் இன்று இரண்டாவது மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட உள்ளது.
இன்று இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின்னர் கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக கூட்டணியில் பெரிய கட்சி என்று எதுவும் இல்லை. தேமுதிக மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியான கட்சியாக உள்ளது. பாமக வரும் என்று அதிமுக பெரிதும் எதிர்பார்த்தது. ஆனால் அது வர வாய்ப்பில்லாமல் போனதால் தேமுதிகவுடன் நிறுத்திக் கொண்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டது. கூட்டணியில் பெரிய கட்சிகள் என்று எதுவும் இல்லாததால் அதிக தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
சின்னசேலம் தமிழ் சங்கம் சார்பில் மாபெரும் ஹைக்கூ திருவிழா
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
வெந்தயக் களி
கண்விழித்தால் கண்ணன் கற்கண்டாகிறான்!
உருளிப் பாத்திரத்தில் பூ வைப்பதால் என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
{{comments.comment}}