தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையம் முழுவதும் தண்ணீர் தேங்கியதினால் கடந்த 3 நாட்களாக விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது. 3 நாட்களுக்கு பின்னர் இன்று விமான சேவை தொடங்கப்பட்டது.
தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் மழை நீர் தேங்கி ஊரையே ஒரு வழியாக்கி விட்டது. இன்னும் கூட பெரும்பாலான இடங்களில் நீர் வடியவில்லை. இங்குள்ள மக்கள் மின்சாரம், போக்குவரத்து,ரயில் சேவை, விமான சேவை போன்ற பல பிரச்சனைகளில் சிக்கி தவித்து வருகின்றனர். மழையின் தாக்கம் குறைந்ததினால், மீட்பு குழுவினர்கள் மீட்பு பணிகளை முழுவீச்சில் செய்து வருகின்றனர்.
மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது தூத்துக்குடி. தேங்கிய தண்ணீர் இன்னும் முழுமையாக வடியாததினால் அதற்குரிய ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக விமான நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் தூத்துக்குடியில் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால் விமான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி - சென்னை இடையே தினமும் 3 விமானங்கள் வந்து போய் கொண்டு இருந்தது. இந்த சேவை கடந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து பாதிக்கப்பட்டது. வரலாறு காணாத மழையால் வெள்ள நீர் விமான நிலையத்தையும் விட்டு வைக்காது அங்கும் தேங்கியது.
இந்த கனமழை காரணமாக சென்னை- தூத்துக்குடி இடையே செயல்பட்டு வந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது. நேற்று மழை முழுவதும் குறைந்த வானிலை சீராகாத காரணத்தினால் விமான சேவை தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் முன்பதிவு செய்திருந்த விமான பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். இன்று வானிலை ஓராளவு சீரான நிலையில் சென்னை-தூத்துக்குடி விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}