மக்களே வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்.. சண்டிகரில் எச்சரிக்கை சைரன்!

May 09, 2025,05:07 PM IST

சண்டிகர்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், விமானத் தாக்குதல் அபாயம் இருப்பதாக எல்லையைர மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சண்டிகர் நகரில், சைரன்கள் ஒலித்ததால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். விமான நிலையம் மூடப்பட்டு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.


இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதால், சண்டிகரில் விமானத் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சண்டிகரின் பல பகுதிகளில் விமானத் தாக்குதல் எச்சரிக்கை தொடர்பான அபாயச் சங்கு ஒலித்தது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும், பால்கனி அல்லது திறந்தவெளியில் இருக்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர். அவசர சேவைகள் தயார் நிலையில் உள்ளன. காவல்துறை ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் விளக்குகளை அணைத்து, திரைச்சீலைகளை மூடி ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையம் மூடப்பட்டு, விமானப் படை கட்டுப்பாட்டில் வந்துள்ளது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் காவல்துறையினருக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டு பணியில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.




சண்டிகர் முழுவதும் காவல்துறையினர் ரோந்து பணியை அதிகப்படுத்தியுள்ளனர். சண்டிகருக்கு அருகில் உள்ள மொஹாலி பகுதியிலும் அபாய சைரன் ஒலிக்கப்பட்டது. இதுகுறித்து மொஹாலி நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், சண்டிகர் யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட சில பகுதிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொஹாலி குடியிருப்பாளர்கள் எல்லைப் பகுதிகளில் ஜாக்கிரதையாக இருக்கவும், வீட்டுக்குள்ளேயே இருக்கவும், ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிப் பலகைகளில் இருந்து விலகி இருக்கவும் அறிவுறுத்துகிறோம்" என்றார். 


சண்டிகரின் சஹீத் பகத் சிங் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்திய விமானப் படை விமான நிலையத்தின் முழு கட்டுப்பாட்டையும் எடுத்துக்கொண்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் அனைத்தும் அடுத்த அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டன. சண்டிகர் சர்வதேச விமான நிலைய லிமிடெட் (CHIAL) தலைமை நிர்வாக அதிகாரி அஜய் குமார் இது குறித்து கூறுகையில், விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. விமானப் படை நிலையமே விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் கவனிக்கும் என்றார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஸ்டாலின் 2...இபிஎஸ் 5...போட்டி போட்டு தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி வீசும் திமுக-அதிமுக

news

பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவது தான் திமுகவின் வழக்கம்: அண்ணாமலை

news

திமுக-அதிமுக.,வின் தேர்தல் வாக்குறுதிகள்...என்ன செய்ய போகிறார் விஜய்?

news

அதிமுக-திமுக வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள் சாத்தியமா?...வாங்க தூர்வாரலாம்

news

பூம்பூம் மாடு வளர்ப்பவர்களுடன் 'காணும் பொங்கல்' கொண்டாடிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

news

ஊழல் செய்தால் பணி மாற்றம் இல்லை, பணி நீக்கம் செய்ய வேண்டும்: சீமான் ஆவேசம்!

news

வீரர்களின் கனவு நனவானது... ஜல்லிக்கட்டை தூக்கி சாப்பிட்ட முதலவர் முக ஸ்டாலினின் 2 அறிவிப்புக்கள்!

news

சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை...முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

பெண்களுக்கு ரூ.2,000 உரிமைத்தொகை... ஆண்களுக்கு இலவச பஸ் பயணம்...இபிஎஸ் அதிரடி அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்