சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் விமானங்களின் கட்டணம் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தாண்டிற்கான தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அக்டோபர் 31ம் தேதி விடுமுறையுடன் நவம்பர் 1ம் தேதியையும் தமிழக அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. அத்துடன் சனி மற்றும் ஞாயிறும் விடுமுறை என்பதால் மொத்தம் 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வேலை, படிப்பு காரணமாக சென்ற மக்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
அதற்காக சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்பார்கள். அப்படி செய்யப்படும் முன்பதிவு டிக்கெட்டுகளை பொது மக்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்குவார்கள். இதனால், டிக்கெட் கிடைக்காமல் பெரும்பாலானவர்கள் அவதிக்குள்ளாவர்கள். அத்தகையவர்கள் விமானம் மூலம் பயணிக்க எண்ணுவார்கள். இதனால் விமான பயணத்திற்கும் போட்டி அதிகளவில் இருக்கும் என்பதால், தற்போது விமான டிக்கெட் விலை ஒன்று அல்ல. இரண்டு அல்ல. தற்பொழுது 3 மடங்கு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை-தூத்துக்குடி, சென்னை-மதுரை, சென்னை-திருச்சி, சென்னை-கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் தற்போது உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.4,109 ஆக இருந்த விமான கட்டணம் தற்போது ரூ. 8,976 முதல் ரூ.13,317 வரை உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கான விமானக்கட்டணம் ரூ.11,749 முதல் ரூ.17,745 வரை விற்கப்பட்டு வருகிறது.தீபாவளிக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், தற்போது விமானக்கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், தீபாவளிக்கு முதல் நாளான நாளை விமானக்கட்டணம் மேலும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் மிகுந்த வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Good மாத்ரே, பிரேவிஸ், ஹூடா அதிரடி.. Bad துபே, தோனி.. Ugly கடைசி வரிசை வீரர்கள்.. CSK ஏமாற்றம்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}