சென்னை: அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி பட டீசர் வெளியான 12 மணி நேரத்தில் 17 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் குட் பேட் அக்லி. மைத்ரீ மூவீஸ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது. த்ரிஷா, அர்ஜூன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது. சரியாக நேற்று மாலை 7.03 மணிக்கு டீசர் ரிலீஸ் ஆனது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு திரையங்குகளில் திரையிடப்பட்டது. டீசர் மரண மாஸாக இருந்ததால், அதனைப் பார்த்த ரசிகர்கள் தியேட்டர்களில் ஒன்ஸ் மோர் , ஒன்ஸ் மோர் என கேட்டதால், பல திரையரங்குகளில் திரும்ப திரும்ப திரையிடப்பட்டது. மேலும், டீசர் முழுவதும் அஜித் குமார் தான் இருக்கிறார், அவருக்கான மாஸா காட்சிகள், டயலாக்குகள் என மொத்த டீசரும் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்ததுள்ளது என்றே சொல்லலாம்.

இந்த டீசர் வெளியாகிய 12 மணி நேரத்தில் 17 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தில் நீண்ட இடைவேலைக்கு பிறகு அஜித்குமார் டானாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசரை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், டீசர் முழுக்கவும் எனர்ஜி மற்றும் அஜித் சாரின் லுக்கில் டார்க் ஷேட் வெளிப்படுகிறது. இயக்குனர் ஆதிக் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}