சென்னை: அஜித், த்ரிஷா நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் அக்டோபர் மாதம் வெளிவரும் என்று அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
அஜித் கடந்த 2 வருடங்களாக நடித்து வரும் படம் தான் விடாமுயற்சி. லைகா தயாரிப்பில் நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ்,ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். பல மாதங்களாக அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்தது.
தற்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் மட்டுமே முடிவு அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது, ரிலீஸ் தேதி ஆகியவை எதுவும் வெளிவராத நிலையில் இருந்து வந்தது. இப்படம் குறித்த அடுத்த கட்ட தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இது குறித்து சில முக்கிய தகவல்களை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா கூறுகையில், சமீபத்தில் நாங்கள் வெளியிட்ட விட முயற்சி வீடியோ ரசிகர்களை உற்சாகப்படுத்தவும், எங்களுடைய கடினமான பணியை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக என்றும் கூறியுள்ளார்.
மேலும், விடாமுயற்சி அடுத்தகட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 19ம் தேதி தொடங்கும் என்றும், அதற்குள் அனிருத் இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து முடித்து விடுவார் என்றும், இதுவரை 60% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகவும், மீதி உள்ள படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த படத்தை அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
விடாமுயற்சிக்காக அஜீத் ரசிகர்கள் ரொம்ப ரொம்ப பொறுமையாக காத்துக் கிடக்கிறார்கள். அதுதொடர்பான அப்டேட்டுகளைக் கேட்டுக் கேட்டு அவர்கள் டயர்டாகி கேட்பதையே நிறுத்திய நிலையில்தான் திடீரென அஜீத் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சியை வெளியிட்டு டயர்டாகிப் போன ரசிகர்களை குஷி மூடுக்குக் கொண்டு வந்துள்ளார் அஜீத் மேலாளர். இதே சூட்டோடு சூடாக படத்தையும் திரைக்குக் கொண்டு வந்தால் சூப்பராக இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாகும்.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}