கவனிச்சீங்களா.. சொல்லி வைத்தாற் போல.. வெள்ளை சட்டையில் வந்த.. அஜீத், விஜய், சூர்யா!

Apr 19, 2024,02:54 PM IST
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலுக்காக வாக்களிக்க வந்த அஜித், விஜய், சூர்யா, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் வெள்ளைச் சட்டையில் வந்து வாக்களித்தனர்.

சினிமா நட்சத்திரங்கள் என்றாலே ஒரு தனி கவனம் இருக்கும். எந்த நிகழ்வு நடந்தாலும் நடிகர், நடிகைகள் யார் யார் வந்தார்கள், எப்படி வந்தார்கள், என்ன செய்தார்கள் என்று மீடியா மட்டும் இல்லங்க பொதுமக்களும் தங்களுடைய கண்பார்வைகளை அவர்கள் மீது தான் வைத்திருப்பார்கள். அடித்துப் பிடித்துக் கொண்டு போய் அவர்கள் மீது அப்பி விழுவார்கள்.

அப்படித் தான் இன்று நடைபெற்ற வாக்குப் பதிவின்போதும் வாக்களிக்க யார் யார் வந்தார்கள், எப்படி வந்தார்கள், என்ன  செய்தார்கள் என்று அனைத்து தரப்பினர்களும் வாட்ச் செய்தார்கள். அப்படி தான் இந்த தேர்தலிலும் முக்கிய நட்சத்திரங்களின் மீது ரசிகர்களின் பார்வை இருந்தது. இன்று நடைபெறும் தேர்தலில் வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக காலையிலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், அஜித்குமார், தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் காலையிலேயே வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை செய்துவிட்டார்கள்.



இவர்களைத் தொடர்ந்து விஜய் எப்போது வருவார், எப்படி வருவார் என்று காலையிலிருந்தே ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருந்தனர். ஒரு கட்சி தலைவராக விஜய் எப்படி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் இருந்தது. வீட்டில் இருந்து வாக்களிப்பதற்காக காரில் வந்தார் விஜய். வாக்குச்சாவடிக்கு வந்த உடன் பல மணி நேரம் காத்திருந்த ரசிகர்கள் விஜய்யை சூழ்ந்து கொண்டனர். விஜய் கூட்டத்தில் சிக்கிக் கொண்டதால் காவலர்கள் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், அஜித்குமார், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விக்ரம் ஆகியோர் வெள்ளை சட்டை அணிந்து வந்து வாக்களித்தனர். இவர்களைத் தொடர்ந்து விஜய்யும் வெள்ளை சட்டையில் வந்து வாக்களித்துள்ளார். சொல்லி வைத்தாற் போல முன்னணி நடிகர்கள் அனைவரும் வெள்ளைச் சட்டையில் வந்தது கவனம் ஈர்ப்பதாக இருந்தது.

இதில் என்னங்க இருக்கு என்று கேட்கலாம். இருக்கே.. கடந்த முறை விஜய் வாக்களிக்க சைக்கிளில் வந்தார். அப்போது அவரது சைக்கிள் கலர் பேசு பொருளானது. எனவேதான் இன்று விஜய் எப்படி வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. ஆனால் வெள்ளைச் சட்டையில் அவர் வந்தது பேசு பொருளானது.. பீஸ் புரோ என்று சொல்லாமல் சொல்லிச் சென்றுள்ளாரா விஜய்!

விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முறையாக வாக்களித்துள்ளார் என்பதால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்