சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் 3 நாட்களுக்கு அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நிற்காது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரம் ரயில் நிலையம் விஸ்தரிக்கப்படுகிறது. பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பராமரிப்புப் பணிகளும் நடந்து வருகின்றன. இதன் காரணமாக அவ்வப்போது ரயில் சேவையில் மாற்றங்களை செய்து வருகிறது தெற்கு ரயில்வே. இந்த நிலையில் 3 நாட்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்தில் நிற்காது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதாவது வருகிற 15, 16 மற்றும் 17 ஆகிய 3 நாட்களும் இந்த மாற்றம் அமலில் இருக்கும். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் நோக்கி வரும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். அதேபோல சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் அனைத்து ரயில்களும் செங்கல்பட்டில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த ரயில்கள் தாம்பரத்தில் நிற்காது?

15ம் தேதி
சென்னை எழும்பூர் - கொல்லம் எக்ஸ்பிரஸ், கொல்லம் சென்னை -எழும்பூர் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், சேலம், சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் -நாகர்கோவில் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், காரைக்கால் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி - சென்னை எழும்பூர் முத்துநகர் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - காரைக்கால் எக்ஸ்பிரஸ், குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்.
16ம் தேதி
சென்னை எழும்பூர் - மதுரை தேஜாஸ் எக்ஸ்பிரஸ், நிஜாமுதீன் - மதுரை சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - கொல்லம் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ், கொல்லம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், சேலம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் - தாம்பரம் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், செங்கோட்டை - சென்னை எழும்பூர் சிலம்பு எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - மதுரை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - காரைக்கால் எக்ஸ்பிரஸ், காரைக்கால் -சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், மதுரை - சென்னை எழும்பூர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி - சென்னை எழும்பூர் முத்துநகர் எக்ஸ்பிரஸ், குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், மதுரை - சென்னை எழும்பூர் தேஜாஸ் எக்ஸ்பிரஸ்
17ம் தேதி
சென்னை எழும்பூர் - மதுரை தேஜாஸ் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - கொல்லம் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - காரைக்கால் எக்ஸ்பிரஸ், கொல்லம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், சேலம் - சென்னை எக்ஸ்பிரஸ், தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் - சென்னை எழும்பூர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், காரைக்கால் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி - சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ், மதுரை - சென்னை எழும்பூர் தேஜாஸ் எக்ஸ்பிரஸ்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}