சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. பிரச்சாரம் முடிவடைய இன்னும் 3 நாட்களே உள்ளதால் வேட்பாளர்கள், தலைவர்கள் என அனைத்துத் தரப்பினரும் வேகம் காட்டி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரி மக்களவைத் தொகுதி, விளவங்கோடு சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தல் ஆகியவற்றுக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் 17ம் தேதி மாலையுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் பிரச்சாரம் ஓயும்.
பிரச்சாரம் முடிவடைய இன்னும் 3 நாட்களே உள்ளதால் அனைத்துக் கட்சியினரும் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அனைத்து தலைவர்களும் தங்களது இறுதிக் கட்டப் பிரச்சாரத்தில் குதித்துள்ளனர்.

சென்னையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினும், முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியும் ஒரே நாளில் பிரச்சாரம் செய்யவுள்ளதால் சென்னை பிரச்சாரக் களம் சூடு பிடித்துள்ளது. முதல்வர் இன்று வட சென்னை மற்றும் மத்திய சென்னை திமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யவுள்ளார். மறுபக்கம் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய சென்னை, தென் சென்னை வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யவுள்ளார். இதில் மத்திய சென்னையில் தேமுதிக போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபக்கம் பிரதமர் நரேந்திர மோடி இன்று திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்யவுள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டம் நடைபெறுகிறது. கடைசிக் கட்ட பிரச்சாரம் என்பதால் பெருமளவில் கூட்டம் காட்ட பாஜகவினர் ஆர்வமாக உள்ளனர். ஏற்பாடுகளும் தடபுடலாக செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
அதேபோல காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் இன்று தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவர் கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் பிரச்சாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கவுள்ளார்.
தமிழ்நாட்டில் பிரச்சாரம் ஓயப் போவதால் பல்வேறு மத்திய அமைச்சர்களும், அகில இந்தியத் தலைவர்களும் தொடர்ந்து முகாமிட்டபடி உள்ளதால் மாநிலமே பரபரப்பாக காணப்படுகிறது.
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}