சென்னை : 2026ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான வேலைகளை இதுவரை எப்போதும் இல்லாத வகையில் ஆறு மாதங்களுக்கு முன்பாகவே துவக்கி, அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளார்கள் தமிழக அரசியல் கட்சியினர்.
தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருந்தாலும் இப்போதே தமிழகத்தில் 120 க்கும் அதிகமான தொகுதிகளில் பிரச்சாரத்தை முடித்து விட்டார் பிரதான எதிர்கட்சியான அதிமுக.,வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. அவரைத் தொடர்ந்து, தேர்தலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படும் தவெக தலைவர் விஜய் தனது பிரச்சார சுற்றுப் பயணத்தை செப்டம்பர் 13ம் தேதி திருச்சியில் இருந்து துவக்க போகிறார். என்னடா எதிர்க்கட்சி எல்லாம் தேர்தல் வேலை பார்க்க கிளம்பிட்டாங்க, ஆளுங்கட்சி அமைதியாக உள்ளதே என நினைத்து விட வேண்டாம்.
பிரச்சாரத்தை துவங்கிய திமுக :
திமுக இளைஞரணி செயலாளரும், தமிழகத்தின் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நேற்றே தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி விட்டார். ஆனால் அதிமுக, தவெக போல் இவர் மக்களை சந்திக்க செல்லவில்லை. திமுக கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளை சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தி, உத்வேகத்துடன் தேர்தல் வேலை பார்க்க சொல்ல போகிறார். இதற்கான முதல் கூட்டம் காஞ்சிபுரத்தில் நேற்று நடந்து முடிந்துள்ளது. இனி ஒவ்வொரு ஊராக சென்று திமுக.,வினரை சந்திக்க போகிறாராம்.
கூட்டணியில் குழப்பம் :
பிரதான கட்சிகள் தான் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி உள்ளன. ஆனால் அவர்களின் கூட்டணி கட்சிகள் உட்கட்சி பூசல், கூட்டணி என பல குழப்பத்தில் உள்ளன. பாமக.,வில் அன்புமணியை நீக்கி அதிரடி காட்டி உள்ளார் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ். அடுத்த என்ன செய்ய போகிறார்கள், யாருடன் கூட்டணி வைக்க போகிறார்கள் என தெரியவில்லை. அதிமுக.,விற்குள் ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன், சசிகலா என பல குழப்பங்கள் உள்ளன. இதனால் பாஜக என்ன செய்து கூட்டணியை ஒன்றிணைத்து, பலப்படுத்துவது என்ற குழப்பத்தில் உள்ளது. தேமுதிக, அமமுக கட்சிகள் எந்த கூட்டணிக்கு செல்வது என தெரியாமல், டிசம்பரில் கூட்டணியை அறிவிப்பதாக கூறி உள்ளார்கள்.
தனியாக நிற்கும் தவெக :
தவெக.,வை பற்றி சொல்லவே வேண்டாம். கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சியில் பங்கு என்று கூட விஜய் ஓப்பனாக அறிவித்தும், இதுவரை ஒரு கட்சி கூட அவருடன் கூட்டணி வைக்க முன் வரவில்லை. மாறாக அவர்கள் கட்சியினர் மீது போலீசார் கேஸ் மீது கேசாக போட்டு வருகிறார்கள். இதற்கிடையில் திருச்சியில் பிரச்சார பயணத்தை துவங்குவதற்கே விஜய்க்கு 23 கன்டிஷன்களை போலீசார் விதித்துள்ளனர். மீறினால் பிரச்சார அனுமதி ரத்து செய்யப்படுவதுடன், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்கள்.
திமுக கூட்டணியிலும் குழப்பம் :
இதில் திமுக கூட்டணி தான் குழப்பமே இல்லாமல் இருக்கிறது என நினைத்து விட வேண்டாம். ஒரு பக்கம் மதிமுக.,விற்கும் உட்கட்சி பூசல். மற்றொரு பக்கம் இப்போதே தொகுதி பங்கீடு பஞ்சாயத்தை துவக்கி உள்ளது காங்கிரஸ். யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த முறை தங்களுக்கு 125 சீட்களை ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளது காங்கிரஸ். இதுவே திமுக தலைமைக்கும், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொகுதி பங்கீடு பேச்சு துவங்குவதற்கு முன்பே திமுக.,விற்கு தலைவலி துவங்கி உள்ளது.
செயல் தலைவர் பதவி அடுத்து யாருக்கு.. டாக்டர் ராமதாஸின் சாய்ஸ் இவரா?.. பரபரக்கும் பாமக!
பாமக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் : டாக்டர் ராமதாஸ் அதிரடி
125 சீட்.. திமுக கூட்டணியில் குண்டைப் போட்ட காங்கிரஸ் தலைவர்.. திமுக.,விலும் ஆரம்பமானது கலகம்
சட்டசபைத் தேர்தல் வேலையில் மும்முரம் காட்டும் பிரதான கட்சிகள்.. குழப்பத்தில் கூட்டணி கட்சிகள்
இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல.. வேடிக்கை காட்ட வரும் சிங்கம்: விஜய்யை விமர்சித்த சீமான்!
13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!
ஆடு, மாடு மாநாட்டை தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும் : சீமான்!
தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி மொழி ஏற்பு!
திருமண உதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்கள் கொள்முதலுக்கு டெண்டர் அறிவிப்பு
{{comments.comment}}