சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இயங்கும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில்உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வருகின்ற 31ம் தேதி கொண்டாட இருப்பதை முன்னிட்டு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வரும் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை வருகிற அக்., 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொது மக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, கூட்டுறவு துறையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் 24,610 முழு நேர நியாய விலை கடைகள் 10,164 பகுதி நேர நியாயவிலை கடைகள் என மொத்தம் 34,774 நியாய விலை கடைகளில் குடிமைப் பொருட்களை பெற்று, தீபாவளி பண்டிகையினை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாய விலை கடைகளும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 27.10.2024 அன்று முழுவதுமாக வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}