Ration shops: தமிழ்நாட்டில்.. ரேஷன் கடைகள் நாளை இயங்கும்.. மக்களே இதைக் கவனிங்க!

May 25, 2024,04:33 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் நாளை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளுக்கு முதல் இரண்டு வாரம் வெள்ளிக்கிழமை வார விடுமுறையாகும். கடைசி 2 வாரத்தில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களாகும். அதன்படி நாளை விடுமுறை நாளாகும். இருப்பினும் நாளை ரேஷன் கடைகள் இயங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் துறையின் செயலாளர் ஹர்சஹாய் மீனா ஒரு சர்க்குலரை அனுப்பியுள்ளார். அதில் இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களை உரிய காலத்துக்குள் வழங்குவதற்கு வசதியாக நாளை பணி நாளாக கருதப்பட்டு ரேஷன் கடைகள் அனைத்தும் இயங்கும்.  நாளைக்குப் பதில் வேறு ஒரு நாளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் என்று தெரிவித்துள்ளார். 



தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ள கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று நேற்றுதான் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் புதிய கார்டுக்காக கிட்டத்தட்ட ஒரு வருடமாக காத்திருப்போர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

புதிய ரேஷன் கிடைத்தால் அதை வைத்து மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கவும் பல பெண்கள் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்