திமுகவின் கண்ணுக்குட்டி மட்டுமல்ல.. கண்ணுக்குட்டியின் எஜமானர்களும் சிக்குவர்: எடப்பாடி பழனிச்சாமி

Jun 19, 2025,04:07 PM IST
சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய வழக்கின் தீர்ப்பு வரும் போது திமுகவின் கண்ணுக்குட்டி மட்டுமல்ல,  கண்ணுக்குட்டியின் எஜமானர்களும் சிக்குவார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 



கள்ளச்சாராய ஆட்சிக்கு, கள்ளக்குறிச்சியே சாட்சி!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் கண்ணீரில் மூழ்கி இன்றோடு ஓராண்டு!

67 உயிர்கள் மரணித்தது கள்ளச்சாராயத்தால் மட்டும் அல்ல. தன் நிர்வாகத் திறமின்மையை மறைக்க பச்சைப்பொய் சொன்ன இந்த ஸ்டாலின் அரசின் கள்ளத்தனத்தாலும் தான்!

மரக்காணம் மரணங்களின் போதே திருந்தாத திமுக அரசின் அலட்சியம், கள்ளக்குறிச்சியில் 67 உயிர்களைக் காவு வாங்கியது!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயப் புழக்கம் இருப்பதை எதிர்க்கட்சி அதிமுக எச்சரிக்கை விடுத்தோமே- அந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கிடப்பில் போட்டதால் வந்த உயிரிழப்புகள் தானே இவை?

CBI விசாரணை வேண்டும் என்ற அதிமுகவின் கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றம் வரை சென்றீர்களே- நீதிக்கே எதிரான ஆட்சி என்பதற்கு, இதை விட வேறென்ன சாட்சி வேண்டும்?

உச்சநீதிமன்றத்திலும் திமுக அரசு குட்டு வாங்கி, தற்போது CBI விசாரணையில் இந்த வழக்கு உள்ளது.

தீர்ப்பு வரும் போது திமுகவின் கண்ணுக்குட்டி மட்டுமல்ல- கண்ணுக்குட்டியின் எஜமானர்களும் சிக்குவர்!

2026-ல் கள்ளச்சாராய_திமுகமாடல் ஆட்சி வீழ்ந்து, அஇஅதிமுக ஆட்சி அமைந்ததும் கள்ளச்சாராயம் அறவே இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாடு மீண்டும் வரும்- இது தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் அளிக்கும் வாக்குறுதி மட்டுமல்ல, மரணித்த 67 உயிர்களுக்குமான நீதியும் அதுவே என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்