சென்னை: பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்ய உள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், நாளை மறு நாள் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். அவர் தியானம் செய்யவுள்ள, கன்னியாகுமரியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மோடியுடன், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வர உள்ளார். பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை மண்டபத்தில் அமர்ந்து இரவு பகலாக 3 நாட்கள் தியானம் செய்ய உள்ளார்.

தமிழகம் வரும் பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது அப்பட்டமான தேர்தல் விதி மீறலாகும் என்று தேர்தல் ஆணையத்திலும் புகார் கொடுத்துள்ளது. அதேசமயம், பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக திண்டிவனத்தில் செய்தியாளர்ளை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், பிரதமர் தியானம் மேற்கொள்வதில் எந்த தவறும் இல்லை. இதனை மறைமுக தேர்தல் பரப்புரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அனைவருக்கும் தியானம் மேற்கொள்ளும் உரிமை உள்ளது. 2019 ஆம் ஆண்டு கூட கேதார்நாத்தில் பிரதமர் மோடி தியானம் செய்திருந்தார். இதில் தவறில்லை என்றார்.
த.மா.கா.தலைவர் ஜிகே வாசன் கூறுகையில், கன்னியாகுமரியில் பிரதமர் தியானம் செய்வது அவரது உயர் ஆன்மீகத்திற்கு எடுத்துக்காட்டு. பிரதமர் ஆன்மீகப் பயணிப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கும், வாக்குப்பதிவிற்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை. அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக குறை கூறுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ், திமுக கூட்டணியின் குறுகிய பார்வைக்கு இது எடுத்துக்காட்டு என கூறியுள்ளார்.
அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கூறும்போது, திமுக காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தால் என்ன நடக்கும். இங்கு இருப்பவர்கள் எல்லாம் சோமாலிய நாட்டில் உள்ளவர்களை போல மாறி நிற்பது தான் நடக்கும். இப்பொழுது மலிவான அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரதமர் வந்து அவர் பாட்டுக்கு தியானம் பண்ணுவதால் என்ன பாதிப்பு வரப்போகிறது. நல்ல விஷயம் தான். இதை நான் கூட்டணிக்காக சொல்லவில்லை. பொதுவாகவே சொல்கிறேன் என்றார்.
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
{{comments.comment}}