ஹைதராபாத்: அல்லு அர்ஜூன் நடிக்க, அட்லீ இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படம் குறித்த பரபரப்பான தகவல்கள் உலா வர ஆரம்பித்துள்ளன.
அட்லீ இயக்கும் 6வது படம்தான் இது. அல்லு அர்ஜூனுக்கு இது 22வது படமாகும். இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.
புதிய படத்திற்கு தற்காலிகமாக AA22 X A6 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் நான்கு வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது தாத்தா, அப்பா, 2 மகன்கள் என நான்கு விதமான பாத்திரங்கலில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், இந்தப் படம் இரண்டு parallel universesல் கதை நடப்பது போல அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை படம் குறித்த எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் தெரியவில்லை.
AA22 X A6 திரைப்படம் ஏற்கனவே இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஜூன் மாதம், படக்குழுவினர் நடிகை தீபிகா படுகோனை படத்தில் இணைத்துக்கொண்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இப்படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், இயக்குநர் அட்லீ தீபிகாவுக்கு கதை சொல்லும் வீடியோவை வெளியிட்டது.
அந்த வீடியோவில், தீபிகாவின் மோஷன் கேப்சர் படப்பிடிப்பின் ஒரு காட்சியும் இடம்பெற்றது. அதில், அவர் ஒரு ராணி போன்ற தோற்றத்தில், குதிரையில் சவாரி செய்து, வாள் ஏந்தியவாறு காணப்பட்டார். அட்லீ இயக்கிய கடைசிப் படம் ஷாருக்கானின் ஜவான் ஆகும். அது பிரமாண்டமான வசூலை வாரிக் குவித்தது நினைவிருக்கலாம். எனவே அல்லு அர்ஜூனை இயக்கும் படமும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
{{comments.comment}}