அல்லு அர்ஜூன் பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியான புஷ்பா2 டீசர்.. வேற லெவல்ல இருக்கே பாஸ்!

Apr 08, 2024,03:09 PM IST
சென்னை: பான் இந்தியா ஸ்டார் அல்லு  அர்ஜூன் பிறந்த நாளை முன்னிட்டு புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இந்த டீசரால் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் அல்லு அர்ஜூனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் படமான ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் டீசரை ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் வெளியான உடனேயே இணையத்தை ஆக்கிரமித்ததோடு, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் டீசரை பார்த்து விட்டு  அல்லு அர்ஜூனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இப்படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவல்லி கதாபாத்திர தோற்றம் அவரது பிறந்த நாள் அன்று வெளியிடப்பட்டது நாம் அறிந்ததே.



கடந்த 2021ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் உருவாகி மெகா ஹிட்டான படம் புஷ்பா. இப்படம் வெளியாகி இந்தியா முழுவதிலும் ரூ.500 கோடி வசூலித்த படம். பாகுபலி படத்துக்கு பிறகு பல மொழிகளில்  தெலுங்கில் வெற்றி பெற்ற படமாக இப்படம் கருதப்படுகிறது. இந்த படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. புஷ்பா2:  தி ரூல் ஆகஸ்ட் 15ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகமாக்கியுள்ளது.

பிரம்மாண்டம், வண்ணங்கள் மற்றும் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகியுள்ள காட்சிகள் அனைத்தும் டீசரில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. டீசரில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருக் காட்சியிலும் புஷ்பா ராஜ் நம்பமுடியாத, அதே சமயம் சக்தி வாய்ந்த அவதாரத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் தீவிரத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார். இதற்கு இன்னும் வலுசேர்க்கும் விதமாக தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை நம் இதயத்துடிப்பை இன்னும் அதிகப்படுத்துகிறது.  

படத்தின் டீசரில் ஜாதரா காட்சி இடம்பெற்றுள்ளது. சம்மக்கா சாரலம்மா ஜாதரா என்றும் அழைக்கப்படும் ஜாதரா, இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் கொண்டாடப்படும் இந்து பழங்குடியின தெய்வங்களை கௌரவிக்கும் ஒரு திருவிழா ஆகும். ஒவ்வொரு ஆண்டும் 1 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் இந்த 4 நாள் திருவிழாவிற்கு வருகை தருகின்றனர்.

மேஸ்ட்ரோ இயக்குநர் சுகுமார் இந்த ஜாதராவை படத்தில் மீண்டும் உருவாக்கியுள்ளார். இதன் பிரம்மாண்டம் மற்றும் நுணுக்கமான காட்சியின் ஒரு கிளிம்ப்ஸ் மட்டுமே டீசரில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் அழகு, அதன் வண்ணங்கள், பாரம்பரியம் என அனைத்தையும் இயக்குநர் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். 2021 பிளாக்பஸ்டர் 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் தொடர்ச்சி இன்னும் பெரிதாகவும், இதுவரை பார்த்திராத அனுபவமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக கடின உழைப்பைப் படக்குழு கொடுத்துள்ளது என்பதற்கான உதாரணம்தான் இந்த டீசர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்